Skip to main content

நுகர்வோர் உபகரண லோன்

திருமணத்திற்குப் பின் உங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க உங்கள் வீட்டை அலங்கரிக்க வேண்டுமா? உங்கள் வீட்டை ஒரு புதிய ஹோம் தியேட்டர் சிஸ்டத்துடன் மேம்படுத்த வேண்டுமா அல்லது ஒரு நவீன சாதனத்தை வாங்க வேண்டுமா? ஒரு நுகர்வோர் உபகரண லோன் உங்களுக்கு இவை அனைத்தையும் சாத்தியமாக்கும். உங்கள் விருப்பமான பொருளுக்கு 100% நிதி பெற்று மற்றும் குறைந்த EMI-இல் திருப்பிச் செலுத்தவும்.

நுகர்வோர் உபகரண லோன்

நுகர்வோர் உபகரண லோன் என்றால் என்ன?

ஒரு நுகர்வோர் உபகரண லோன் என்பது வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை வாங்கும் கடன்/நிதி விருப்பத்தேர்வாகும்.

Return to top

ஒரு நுகர்வோர் உபகரண லோனை அளிப்பதற்கு முன் கடன் வழங்குநர்கள் எதைப் பார்ப்பார்கள்?

கடன் வழங்குநர்கள் உங்கள் ஆண்டு வருமான மற்றும் கடன் வரலாற்றைப் பார்ப்பார்கள். ஒரு நுகர்வோர் உபகரண லோன் பாதுகாப்பற்ற லோனாக இருப்பதால், கடன் வழங்குநர்கள் குறிப்பாக உங்கள் திருப்பிச் செலுத்தும் வரலாறு மற்றும் CIBIL மதிப்பெண்ணைப் பார்ப்பார்கள். மொத்தத்தில் அறிக்கைத் தவறுகள் இல்லாமல் மற்றும் கடன் வழங்குநருக்கு சாதகமாக இருப்பததை உறுதி செய்வதற்கு தொடர்ந்து உங்கள் CIBIL மதிப்பெண்ணை கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறது.

இங்கு கிளிக் செய்து உங்கள் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையைச் சரிபார்க்கவும்.

Return to top

அனைத்து வகைகளுக்கும் வழக்கமான வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்க கட்டணம் என்ன?

நுகர்வோர் உபகரண லோனிற்கான வட்டி விகிதங்கள் ஒரு கடன் வழங்குபவரிடமிருந்து மற்றொரு கடன் வழங்குபவருக்கு மாறுபடும் மற்றும் இது 12% முதல் 22% வரை இருக்கும். சில கடன் வாங்குநர்கள் அவர்களின் விளம்பர சலுகைகளின் அடிப்படையில் 0% வட்டியும் அளிப்பார்கள். பெரும்பாலான கடன் வாங்குநர்கள் லோன் தொகையின் 1-3% ஐ நியாயமான செயலாக்க கட்டணமாக வசூலிப்பார்கள்.

Return to top

தேவைப்படும் ஆவணங்கள் என்ன?

நுகர்வோர் உபகரண லோனிற்கு தேவைப்படும் ஆவணங்கள் ஒரு கடன் வழங்குபவரிடமிருந்து மற்றொரு கடன் வழங்குபவருக்கு மாறுபடும். பொதுவாக ஆவணங்களின் பட்டியலில் உட்படுவது: அடையாள ஆதாரம் (PAN கார்டு, வாக்காளர் ஐடி, ஆதார் கார்டு போன்றவை) மற்றும் முகவரி ஆதாரம் (பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மின் ரசீது போன்றவை) மற்றும் வருமானச் சான்று (சமீபத்திய சம்பள ரசீது).

Return to top

நான் லோனை முன்கூட்டியே தீர்க்கலாமா, மற்றும் முன்கூட்டியே தீர்ப்பதற்கான கட்டணங்கள் இருக்கின்றனவா? செயலாக்கம் என்றால் என்ன?

ஆம், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் லோனை முன்கூட்டியே தீர்க்கலாம். எனினும், முன்கூட்டியே தீர்க்கும் காலம் அனைத்து கடன் வழங்குநருக்கும் மாறுபடும், மற்றும் லோன் வழங்கப்பட்ட பின் முதல் EMI-க்கு பின் தொடங்கி 6 மாதங்களுக்கு பிறகு வரை இருக்கும். நுகர்வோர் உபகரண லோன்களுக்கு பெரும்பாலான கடன் வழங்குநர்கள் முன்கூட்டியே தீர்க்கும் கட்டணம் விதிப்பதில்லை, ஆனால் ஒரு சில கடன் வழங்குநர்கள் நிலுவையில் உள்ள அசல் தொகையில் 2-4% வரை விதிப்பார்கள். நீங்கள் கடன் வழங்குநரைத் தொடர்புக் கொண்டு அவர்கள் முன்கூட்டியே தீர்ப்பதற்கு பின்பற்றும் செயலாக்கம் பற்றித் தெரிந்துக்கொள்ளலாம்.

Return to top

நான் லோன் எடுப்பதற்கான காலங்கள் என்ன?

பொதுவாக நுகர்வோர் உபகரண லோன்களுக்கு 8 முதல் 36 மாதங்கள் வரை நெகிழ்வான காலம் இருக்கும்.

Return to top

நீங்கள் எவற்றையெல்லாம் பார்க்க வேண்டும்?

எப்பொதும் பல்வேறு கடன் வழங்குநர்களிடம் வட்டி விகிதங்கள், செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் பொருந்தும் மற்ற கட்டணங்களை சரிபார்த்து, ஒப்பிட்டு அதன் பிறகு சிறந்தச் சலுகையளிக்கும் கடன் வழங்குநரை தேர்வு செய்வது அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் லோன் தகுதியை சரிபார்த்து மற்றும் அதன் அடிப்படையில் நீங்கள் தகவலறிந்த முடிவு எடுப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

Return to top