உங்கள் CIBIL மதிப்பெண் ஒரு மதிப்பீட்டு படிமுறையால் உருவாக்கப்படுகிறது, அது அதிக அளவில் தரவு குறிப்புகள் மற்றும் மேக்ரோ-அளவில் கடன் போக்குகளை கணக்கில் எடுத்துக்கொள்ளும். CIBIL மதிப்பெண்ணை மேலும் விரிவாக்கவும், கடன்களில் சாத்தியமான தவறுகள், நுகர்வோரின் கடன்-மதிப்பு மற்றும் அவர்/அவள் திருப்பிச் செலுத்தும் சாத்தியக்கூறுகளைக் கணிப்பதற்கான மதிப்பெண் திறனை மேம்படுத்துவதற்கும் புதிய தரவுப் புள்ளிகள் மற்றும் போக்குகளை இணைக்கும் படிமுறையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
புதிய CIBIL மதிப்பெண் கடன் காலச்சுழற்சியின் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு நலன்களை அளிக்கும். புதிய CIBIL மதிப்பெண் முன்பு ஏற்கனவே லோன் வாங்கிய நுகர்வோருக்கு அவர்களின் கடன் போக்கை பற்றி மேலும் விரிவான விளக்கம் அளிக்க உதவும். இது மதிப்பெண்ணை உருவாக்குவதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் கடன் மற்றும் திருப்பிச் செலுத்தும் வரலாற்றின் காலத்தை அதிகரித்ததால் சாத்தியமாகியது. ஆதலால், புதிய CIBIL மதிப்பெண், கடன் வழங்குநர்கள் கடன் தவறும் வாய்ப்புகளைக் கணிக்கக்கூடிய துல்லியத்தை அதிகரிப்பதன் மூலம், கடன் வழங்குநர்கள் சிறந்த முறையில் அடிக்கடி கடன் வழங்க உதவும்.
புதிய CIBIL மதிப்பெண், கடன் சுயவிவரங்கள் மற்றும் நுகர்வோரின் திருப்பிச் செலுத்தும் போக்கு ஆகியவற்றின் சிறிய நுணுக்கங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, கடன் வழங்குநர்கள் அதிகத் துல்லியத்துடன் அபாய சுயவிவரங்களை மதிப்பிடுவதற்கு உதவுவதோடு, அவர்கள் முன்பு கடன் மறுத்த வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கவும் உதவுகின்றது.
புதிய CIBIL மதிப்பெண் 300 முதல் 900-ற்கு இடையில், பழைய CIBIL மதிப்பெண்ணின் அதே வரம்பாக உள்ளது. எனினும், CIBIL மதிப்பெண்ணை உருவாக்கும் மதிப்பீட்டு படிமுறை மாற்றப்பட்டுள்ளதால், புதிய CIBIL மதிப்பெண்ணிற்கு உருவாக்கப்பட்ட எண்ணிலக்க மதிப்பு பழைய CIBIL மதிப்பெண்ணிற்கு உருவாக்கப்பட்ட எண்ணிலக்க மதிப்பிலிருந்து மாறுபடும்.
புதிய CIBIL மதிப்பெண் |
பழைய CIBIL மதிப்பெண் |
36 மாத கடன் வரலாற்றின் அடிப்படையிலானது |
24 மாத கடன் வரலாற்றின் அடிப்படையில் மட்டும் |
6 மாதங்களுக்கு குறைவான நுகர்வோரின் கடன் வரலாற்றையும் மதிப்பிடும் |
6 மாதங்களுக்கு குறைவான நுகர்வோரின் கடன் வரலாற்றையும் மதிப்பிடும் நுகர்வோர் ஒரு எண்ணிலக்க மதிப்பெண் பெறுவதற்கு முன் 6 மாத கடன் வரலாறு உருவாக்க வேண்டியிருந்தது |
உங்கள் புதிய CIBIL மதிப்பெண்ணை பழைய CIBIL மதிப்பெண்ணுடன் ஒப்பிடுகையில் உள்ள வித்தியாசமானது ஒவ்வொரு மதிப்பெண்ணையும் உருவாக்கப் பயன்படுத்தும் மதிப்பீட்டு படிமுறையில் உள்ள மாறுபாடு தான் காரணமாகும். இதன் விளைவாக, புதிய CIBIL மதிப்பெண்ணை பழைய பதிப்புடன் ஒப்பிடுகையில் அதே தரவிலும் குறைந்த எண்ணிலக்க மதிப்பை உருவாக்க வழிவகுக்கும். புதிய CIBIL மதிப்பெண்ணின் எண்ணிலக்க மதிப்பு வீழ்ச்சியால் உங்கள் கடன் சுயவிவரம் மோசமடைந்தது என்று அர்த்தமல்ல, மேலும் இது கடன் வழங்குநர்கள் உங்கள் கடன் விண்ணப்பத்தைப் பார்க்கும் விதத்தில் எந்த மாற்றத்திற்கும் வழிவகுக்காது.
உங்கள் புதிய CIBIL மதிப்பெண்ணை பழைய CIBIL மதிப்பெண்ணுடன் ஒப்பிடுகையில் உள்ள வித்தியாசமானது ஒவ்வொரு மதிப்பெண்ணையும் உருவாக்கப் பயன்படுத்தும் மதிப்பீட்டு படிமுறையில் உள்ள மாறுபாடு தான் காரணமாகும். இதன் விளைவாக, புதிய CIBIL மதிப்பெண்ணை பழைய பதிப்புடன் ஒப்பிடுகையில் அதே தரவிலும் குறைந்த எண்ணிலக்க மதிப்பை உருவாக்க வழிவகுக்கும். புதிய CIBIL மதிப்பெண்ணின் எண்ணிலக்க மதிப்பு வீழ்ச்சியால் உங்கள் கடன் சுயவிவரம் மோசமடைந்தது என்று அர்த்தமல்ல, மேலும் இது கடன் வழங்குநர்கள் உங்கள் கடன் விண்ணப்பத்தைப் பார்க்கும் விதத்தில் எந்த மாற்றத்திற்கும் வழிவகுக்காது.
புதிய CIBIL மதிப்பெண் 300 முதல் 900-ற்கு இடையில், பழைய CIBIL மதிப்பெண்ணின் அதே வரம்பாக உள்ளது. எனினும், CIBIL மதிப்பெண்ணை உருவாக்கும் மதிப்பீட்டு படிமுறை மாற்றப்பட்டுள்ளதால், புதிய CIBIL மதிப்பெண்ணிற்கு உருவாக்கப்பட்ட எண்ணிலக்க மதிப்பு பழைய CIBIL மதிப்பெண்ணிற்கு உருவாக்கப்பட்ட எண்ணிலக்க மதிப்பிலிருந்து மாறுபடும்.
உங்கள் புதிய CIBIL மதிப்பெண் கடன் வழங்குநர்கள் உங்கள் லோன் விண்ணப்பத்தை அங்கீகரிக்கும் அல்லது நிராகரிக்கும் முடிவை பாதிக்காது. எனினும், தெளிவாக புரிந்து கொள்வதற்கு, தயவுசெய்து உங்கள் கடன் வழங்குநரின் தனிப்பட்ட கடன் கொள்கைகளைப் பார்க்கவும்.
CIBIL மதிப்பெண் என்பது கடன் வழங்குனர்கள் உங்கள் கடன் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்யும்போது கருதும் அளவுருக்களில் ஒன்றாகும். எங்கள் அனைத்து உறுப்பு வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்கள் புதிய CIBIL மதிப்பெண்ணிற்கு மாறும் செயலாக்கத்தில் உள்ளனர். எனினும், மறுசீரமைப்பு பயிற்சி நடந்துக் கொண்டிருக்கையில் மாற்றம் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது சில உறுப்பினர்கள் CIBIL மதிப்பெண்ணின் பழைய பதிப்பை தொடர்ந்து பயன்படுத்துவார்கள். இதன் விளைவாக, கடன் வழங்குநர் லோன் விண்ணப்ப மதிப்பீட்டின் போது எடுத்த (பழைய CIBIL மதிப்பெண்) மதிப்பெண், நீங்கள் டாஷ்போர்டில் (புதிய CIBIL மதிப்பெண்) பார்க்கும் CIBIL மதிப்பெண்ணிலிருந்து மாறுபட்டிருக்கும். எனினும், இந்த வித்தியாசம் கடன் வழங்குநர் உங்கள் கடன் விண்ணப்பத்தை அங்கீகரிக்க அல்லது நிராகரிக்க எடுக்கும் முடிவைப் பாதிக்காது.
இறுதியில் எங்கள் அனைத்து உறுப்பு வங்கிகளும் கடன் நிறுவனங்களும் புதிய CIBIL மதிப்பெண்ணுக்கு மாறியதும், வங்கி வைத்திருக்கும் CIBIL மதிப்பெண்ணிற்கும், உங்கள் CIBIL டாஷ்போர்டில் நீங்கள் காணுவதிலும் இனி எந்த வித்தியாசமும் இருக்காது.
புதிய CIBIL மதிப்பெண்ணின் அறிமுகம் கடன் வழங்குநர்கள் உங்கள் லோன் விண்ணப்பத்தை அங்கீகரிக்கும் அல்லது நிராகரிக்கும் முடிவை பாதிக்காது. எனினும், தெளிவாக புரிந்து கொள்வதற்கு, தயவுசெய்து உங்கள் கடன் வழங்குநரின் தனிப்பட்ட கடன் கொள்கைகளைப் பார்க்கவும்.
லோன் வழங்கும் முடிவு என்பது கடன் நிறுவனத்தின் கடன் கொள்கையை மட்டுமே பொறுத்திருக்கும். கடன் வழங்குநர்கள் பழைய CIBIL மதிப்பெண்ணிற்கும் மற்றும் புதிய CIBIL மதிப்பெண்ணிற்கும் பல்வேறு கட்-ஆஃப் மதிப்பெண்களை வைத்திருக்கலாம். கடன் வழங்குநர் புதிய CIBIL மதிப்பெண்ணின் அடிப்படையில் உங்கள் லோன் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்திருந்தால், கடன் வழங்குநர் புதிய CIBIL மதிப்பெண்ணிற்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட CIBIL மதிப்பெண் கட்-ஆஃப்பை வைத்திருப்பார்.
CIBIL மதிப்பெண் கடன் வழங்குநர்களின் கடன் கொள்கையின் அளவுகோலாக இருந்தாலும், CIBIL மதிப்பெண்ணின் புதிய மற்றும் பழைய பதிப்புகளின் எண்ணிலக்க மதிப்பின் மாறுபாடு உங்கள் கடன் சுயவிவரத்தை மாற்றாது என்பதை தயவுசெய்து கவனிக்கவும். ஆதலால், கடன் வழங்குநர்கள் கடன் விண்ணப்பத்தை பார்ப்பது மற்றும் அதை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பதை இது பாதிக்காது.
கடன் பயன்பாடு, கட்டண வரலாறு (தாமதமாக செலுத்தப்பட்ட கட்டணங்களின் நிகழ்வுகள் மற்றும் தாமதமான கட்டணங்களின் அளவு), கடன் பயன்பாடுகள் மற்றும் கடன் கலவை போன்ற காரணிகளுடன் கூடுதலாக, புதிய CIBIL மதிப்பெண் இதைப் போன்ற புதிய மாறிகளையும் ஒருங்கிணைக்கிறது
உங்கள் கடன் அறிக்கையில் இந்த காரணிகளின் முழுமையான மதிப்புகள் மற்றும் பண்புரீதியான சிறப்பியல்புகள் புதிய CIBIL மதிப்பெண்ணில் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
உங்கள் புதிய CIBIL மதிப்பெண் ஏற்கனவே உங்கள் டாஷ்போர்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் உங்கள் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி டாஷ்போர்டில் லாக்-இன் செய்து உங்கள் புதிய CIBIL மதிப்பெண்ணைப் பார்க்கலாம். உங்கள் கடன் வரலாறு தொடர்புடைய சமீபத்திய தகவல்களை உங்களுக்கு அளிக்கும் வாக்குறுதியின் ஒரு பங்காக, நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையைப் புதுப்பிக்கும் போது உங்கள் புதிய CIBIL மதிப்பெண்ணைக் காண்பீர்கள்.
ஆம், உங்கள் வருடாந்திர கடன் அறிக்கையுடன் உங்களுக்கு புதிய CIBIL மதிப்பெண் கிடைக்கும்.
உங்கள் டாஷ்போர்டில் உங்கள் சமீபத்திய CIBIL மதிப்பெண் மட்டும் தான் காட்டப்படும். ஆதலால், இப்போது டாஷ்போர்டில் காட்டப்படும் மதிப்பெண் புதிய CIBIL மதிப்பெண்ணாகும். உங்கள் டாஷ்போர்டில் உள்ள மதிப்பெண் வரலாறு பிரிவில் உங்கள் செயலில் உள்ள CIBIL மதிப்பெண் சந்தா திட்டத்துடன் உங்கள் பழைய பதிப்பின் CIBIL மதிப்பெண்களை (12 மாத காலம் வரை) தொடர்ந்து காணலாம்.
உங்கள் டாஷ்போர்டில் காட்டப்படும் சமீபத்திய CIBIL மதிப்பெண்ணானது, CIBIL மதிப்பெண்ணின் புதிய பதிப்பாகும். டாஷ்போர்டில் காட்டப்படும் CIBIL மதிப்பெண்ணை நீங்கள் மாற்ற அல்லது தேர்வு செய்ய முடியாது. எங்கள் அனைத்து உறுப்பு வங்கிகளும் கடன் நிறுவனங்களும் புதிய CIBIL மதிப்பெண்ணுக்கு மாறும் செயலில் உள்ளன, இந்த மாற்றம் செய்யப்பட்ட பிறகு சந்தையில் அனைவரும் CIBIL மதிப்பெண்ணின் ஒற்றைப் பதிப்பைப் பயன்படுத்துவார்கள்.
நீங்கள் செயலில் உள்ள CIBIL சந்தாவுடன், டாஷ்போர்டின் மதிப்பெண் வரலாற்றுப் பிரிவில் 12 மாத காலம் வரை புதுப்பிக்கப்பட்ட உங்கள் CIBIL மதிப்பெண்களை (பழைய பதிப்பு) காணலாம்.
கடன் சுருக்க அம்சம் உங்கள் CIBIL அறிக்கையின் மிக முக்கியமான பகுதிகளின் விரைவுச் சுருக்கத்தை அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. கடன் சுருக்க அம்சத்தில் அளிக்கப்பட்டுள்ள தரவில் மாற்றம் இலை.
உங்கள் புதிய CIBIL மதிப்பெண், மதிப்பெண் பகுப்பாய்வுடன் வருகிறது. மதிப்பெண் பகுப்பாய்வு என்பது உங்கள் CIBIL மதிப்பெண்ணைப் பாதிக்கக்கூடிய குறிப்பிட்ட காரணிகள் மற்றும் அவற்றை சாத்தியமாக மேம்படுத்தக்கூடியவற்றைப் பற்றி விளக்கமளிக்கும். புதிய CIBIL மதிப்பெண்ணைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் படிமுறை மதிப்பெண்ணைக் கணக்கிட அதிக காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கையில், புதிய CIBIL மதிப்பெண்ணுடன் வழங்கப்படும் மதிப்பெண் பகுப்பாய்வில் நீங்கள் மதிப்பெண்ணை நன்கு புரிந்துகொள்ள உதவும் கூடுதல் காரணிகள் பற்றிய விளக்கங்களை உட்படும்.
ஒரு நல்ல கடன் வரலாற்றைப் பராமரிப்பதன் மூலம் உங்கள் CIBIL மதிப்பெண்ணை மேம்படுத்தலாம், மற்றும் இது கடன் வழங்குநர்களின் லோன் ஒப்புதலுக்கு அவசியமாகும். இந்த 6 படிகளைப் பின்பற்றுவது, உங்கள் மதிப்பெண்ணை மேம்படுத்த உதவும்:
CIBIL அறிக்கையில் உட்படும் தகவலில் எந்த மாற்றாமும் இருக்காது. உங்கள் CIBIL மதிப்பெண்ணைக் கணக்கிட படிமுறை இந்தத் தகவலைப் பயன்படுத்தும் விதத்தில் மட்டும் மாற்றம் இருக்கும்.
ஆம். நீங்கள் உங்கள் CIBIL அறிக்கையில் ஏதேனும் தவறுகளைக் கண்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட பிரிவில் ஒரு சர்ச்சையை எழுப்ப உங்கள் CIBIL டாஷ்போர்டில் உள்ள ‘ஒரு சர்ச்சையை எழுப்பு’ இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். சர்ச்சையைத் தீர்க்கும் செயலாக்கம் முன்பைப் போலவே இருக்கும். அதைப் பற்றி படிக்க நீங்கள் இங்கு கிளிக் செய்யலாம்..
உங்கள் டாஷ்போர்டில் மக்கள் தொகை தரவரிசை பிரிவு உள்ளது, இதில் CIBIL மதிப்பெண் கிடைக்கக்கூடிய மற்ற நுகர்வோருடன் ஒப்பிடுகையில் உங்கள் CIBIL மதிப்பெண்ணின் அடிப்படையில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை விளக்கும். இப்போது டாஷ்போர்டில் காட்டக்கூடிய மக்கள் தொகை தரவரிசை புதிய CIBIL மதிப்பெண்ணின் அடிப்படையில் இருக்கும்.
உங்கள் டாஷ்போர்டில் உள்ள தனிப்பயனாக்கப்பட்ட லோன் சலுகைகள் பிரிவு கடன் வழங்குநர்களின் சலுகைகளை உங்கள் கடன் தகுதி அடிப்படையில் அளிக்கும். உங்கள் CIBIL மதிப்பெண் உங்கள் கடன் சலுகையை கணக்கிட பயன்படுத்தப்படும் காரணிகளில் ஒன்றாகும். இந்த பிரிவில் இருக்கும் கடன் சலுகைகளுக்கான அளவுகோல்கள் புதிய CIBIL மதிப்பெண்ணின் அடிப்படையில் பங்கேற்கும் உறுப்பினர்களால் வழங்கப்படும் புதிய மதிப்பெண் கட்-ஆஃப்களை இணைக்க திருத்தப்பட்டுள்ளன.
மதிப்பெண் மாற்ற விழிப்பூட்டலின் நோக்கமானது, தாமதக் கட்டணங்கள், புதிய கடன் விண்ணப்பம் போன்ற உங்கள் CIBIL அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தரவின் காரணத்தினால் எழும் மதிப்பெண் மாற்றத்தை உங்களுக்கு அறிவிப்பதற்காகும். உங்கள் டாஷ்போர்டில் காட்டப்படும் புதிய CIBIL மதிப்பெண் பழைய CIBIL மதிப்பெண்ணுடன் ஒப்பிடுகையில் மாறுபட்ட எண்ணிலக்க மதிப்பைக் கொண்டிருக்கும். எனினும், மதிப்பெண்ணில் உள்ள இந்த வித்தியாசம் அடிப்படைக் கடன் சுயவிவரத்தில் எந்த மாற்றத்தையும் குறிக்காது. உங்கள் புதிய CIBIL மதிப்பெண் தானியக்கமாகப் புதுப்பிக்கப்பட்ட போது அதே தரவு CIBIL அறிக்கையில் புதிய மற்றும் பழைய CIBIL மதிப்பெண்களுக்கு மாறுபட்ட எண்ணிலக்க மதிப்பிற்கு வழிவகுக்கலாம் அதனால் தான் உங்களுக்கு விழிப்பூட்டல் அனுப்பப்படவில்லை. இந்த மாறுபாட்டுக்கு இரண்டு மதிப்பெண் பதிப்புகளையும் உருவாக்க பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு படிமுறையில் உள்ள மாறுபாடுகள் தான் காரணம்.
குறிப்பு:உங்கள் புதிய CIBIL மதிப்பெண்ணில் அடுத்து வரும் மாற்றங்களுக்கு நீங்கள் விழிப்பூட்டல் அறிவிப்புப் பெறுவீர்கள்.
ஆம். நாங்கள் எங்கள் ஸ்கோர் சிமுலேட்டர் அம்சத்தை புதிய CIBIL மதிப்பெண்ணுடன் இணைக்க புதுப்பித்துள்ளோம். அதனால், இப்போதிலிருந்து ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு கடன் போக்கை உருவகப்படுத்த மற்றும் உங்கள் புதிய CIBIL மதிப்பெண்ணில் சாத்தியமான தாக்கத்தை சரிபார்க்க பயன்படுத்தும் போது, உருவகப்படுத்தப்பட்ட மதிப்பெண் புதிய படிமுறையின் அடிப்படையில் இருக்கும்.