CIBIL பதிவுகளில் என் பெயரில் குறை பதிவாகியுள்ளதால் என் கடன் நிராகரிக்கப்பட்டுள்ளது. CIBIL-இன் தவறியவர்கள் பட்டியலில் இருந்து என் பெயரை எப்படி அகற்றுவது?
CIBIL தவறியவர்கள் பட்டியலை பராமரிப்பதில்லை. கடன் நிறுவனங்களின் உறுப்பினர்கள் அறிவித்த நபரின் கடன் வரலாற்றை நாங்கள் பராமரிக்கிறோம். லோன் வழங்கும் முடிவு என்பது கடன் நிறுவனத்தின் கடன் கொள்கையை மட்டுமே பொறுத்திருக்கும். உங்கள் கடன் வரலாற்றை விவரமாக சரிபார்க்க மற்றும் உங்கள் பெயரில் பிரதிபலிக்கும் குறைகள்/தவறுகளை அடையாளம் காண CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.
என் CIBIL அறிக்கையில் என்ன மாதிரியான தவறுகள் பிரதிபலிக்கக் கூடும்?
ஒருவேளை உங்கள் CIR-இல் உள்ள உங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்கள்/விசாரணைகள் உங்களுக்கு சொந்தமானது இல்லையென்றால்.
கடன் நிறுவனங்கள் உங்கள் கடன் கணக்கின் விவரங்களை பெயர், முகவரி, பிறந்த தேதி, PAN, தொலைபேசி எண், வருமானம் போன்ற உங்கள் தனிப்பட்ட/தொடர்பு/வேலைவாய்ப்பு தகவல்களுடன் சமர்ப்பிக்கின்றன. பிறகு CIBIL இந்த விவரங்களின் அடிப்படையில் உங்கள் முழுமையான கடன் சுயவிவரத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு முறையும் தகவல்களில் மாற்றம் ஏற்படும் போதும் கடன் நிறுவனத்தில் அவற்றைப் புதுப்பிப்பது முக்கியமாகும், ஏனென்றால், தவறான விவரங்கள் தவறான CIR உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்.
பொதுவாகக் கடன் நிறுவனங்கள் தரவை CIBIL-ற்கு 30-45 நாட்களில் சமர்ப்பிக்கின்றன மற்றும் கடைசி நிலுவையைச் செலுத்திய 45 நாட்களுக்குள் நீங்கள் CIBIL அறிக்கையை வாங்கினால், அது புதுப்பிக்கப்பட்டிருக்காது. இது உங்கள் CIBIL அறிக்கையில் தவறான தற்போதைய இருப்பு அல்லது மிகைத் தொகை பிரதிபலிப்புக்கு வழிவகுக்கும். எனினும், ஒருவேளை அந்த அக்கவுண்டுடன் இணைந்த 'அறிவிக்கப்பட்ட தேதி' (அந்த கடன் வழங்குநரால் தரவு சமர்ப்பிக்கப்பட்ட தேதி) 2 மாதங்களுக்கு மேல் இருந்து, மற்றும் செலுத்தப்பட்ட கட்டணம் பிரதிபலிக்கவில்லை என்றால் நீங்கள் ஒரு சர்ச்சையை எழுப்பலாம். (ஒரு சர்ச்சையை எப்படி எழுப்புவது என்று தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்).
நான் அக்கவுண்ட்களை மூடிவிட்டேன்/தீர்த்துள்ளேன், ஆனால், அவை என் அறிக்கையில் இன்னும் காண்பிக்கப்படுகின்றன. எனது CIBIL அறிக்கையை எப்படி புதுப்பிப்பது?
கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) 2005 ஆம் ஆண்டு சட்டப்படி, சம்பந்தப்பட்ட கடன் நிறுவனத்தின் உறுதிப்படுத்தல் இல்லாமல் CIBIL தரவுத்தளத்தில் எந்த தகவலையும் மாற்ற முடியாது. கடன் நிறுவனங்கள் தரவை CIBIL-ற்கு ஒவ்வொரு 30-45 நாட்களுக்கு ஒருமுறை சமர்ப்பிக்கின்றன மற்றும் உங்கள் அக்கவுண்ட் மூடப்பட்ட/தீர்க்கப்பட்ட 45 நாட்களுக்குள் நீங்கள் CIBIL மதிப்பெண்ணை மற்றும் அறிக்கையை வாங்கினால், அது CIBIL பதிவேட்டில் புதுப்பிக்கப்பட்டிருக்காது. உங்கள் அக்கவுண்ட் புதுப்பிக்கப்பட்ட நிலையை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
CIBIL தரவில் திருத்தம் செய்ய முடியுமா அல்லது CIBIL அறிக்கையில் ஏதேனும் தகவல்களை புதுப்பிக்க/நீக்க முடியுமா?
CIBIL உங்கள் CIBIL அறிக்கையில் நேரடியாக மாற்றங்கள் செய்ய முடியாது. மாற்றம் ஒருமுறை மட்டும் அங்கீகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கடன் நிறுவனத்தால் அளிக்கப்பட்டதும் உங்கள் CIBIL அறிக்கை புதுப்பிக்கப்படும்.
நான் என் அறிக்கையில் ஒரு தவறைக் காண்கிறேன். நான் ஒரு சர்ச்சையை எப்படி எழுப்புவது? சர்ச்சையைத் தீர்க்க எவ்வளவு காலம் ஆகும்?
எங்களுடன் ஒரு சர்ச்சையைத் தொடங்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் சர்ச்சை செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்:
மேலும் அறிய இந்த வீடியோ இணைப்பைக் கிளிக் செய்க.
குறிப்பு– ஆன்லைன் சர்ச்சைப் படிவத்தில் (அதாவது தனிப்பட்ட, தொடர்பு, வேலைவாய்ப்பு, அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் விசாரணை) ஒவ்வொரு பகுதிக்கும் செல்வதன் மூலம் உங்கள் அறிக்கையில் பல புலங்கள் மற்றும் தகவல்களை ஒரே புகாரில் நீங்கள் சர்ச்சைப் பதிவு செய்யலாம்.
கடன் வழங்குநரிடமிருந்து உங்கள் பெறப்பட்ட அறிக்கை:
மாறாக, நீங்கள் பின்வரும் முகவரியில் எங்களுக்கு எழுதுவதன் மூலம் ஒரு சர்ச்சைக் கோரிக்கையை எழுப்பலாம்: TransUnion CIBIL Limited, ஒன் இந்தியாபுல்ஸ் மையம், டவர் 2ஏ, 19 வது மாடி, சேனாபதி பாபாட் மார்க், எல்பின்ஸ்டன் சாலை, மும்பை - 400 013
சர்ச்சை சமர்ப்பிக்கப்பட்டதும், CIBIL உங்கள் கடன் அறிக்கையில் தொடர்புடைய புலம்/அக்கவுண்ட்/பகுதியை "சர்ச்சையின் கீழ் உள்ளது" என்று குறிப்பிடும்.
ஒரு சர்ச்சையைத் தீர்க்க கிட்டத்தட்ட 30 நாட்கள் ஆகலாம், இது கடன் நிறுவனம் பதிலளிக்க எடுத்துக்கொள்ளும் காலத்தைப் பொறுத்தது.
சர்ச்சைத் தீர்க்கும் செயல்முறையைப் புரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
எனது அறிக்கை முழுமையடையவில்லை. CIBIL என் அறிக்கையில் தகவலைச் சேர்க்க முடியுமா?
CIBIL உங்கள் CIBIL அறிக்கையில் நேரடியாக எந்தத் தகவலும் சேர்க்க முடியாது. கடன் நிறுவனங்கள் (CIs) எங்களுக்கு அளித்தபடி தகவல் உங்கள் CIBIL அறிக்கையில் கிடைக்கும். முழுமையான மற்றும் துல்லியமான தரவை CIBIL-ற்கு தெரிவிப்பது CI-களின் பொறுப்பாகும். இந்தத் தகவலை சேகரித்து அனைத்து CI-க்கும் துல்லியமாக புதுப்பிப்பது CIBIL-இன் பொறுப்பாகும். தயவுசெய்து தவறியத் தகவல்களைப் பற்றி CIBIL-க்கு தெரிவிக்க உங்கள் கடன் நிறுவனத்தைத் தொடர்புக் கொள்ளவும்.
கிளை விவரங்களை உள்ளிடாமல் என்னால் ஒரு சர்ச்சையை சமர்ப்பிக்க முடியவில்லை? என்னால் என்ன செய்ய முடியும்?
சில வங்கிகளால் நீங்கள் கடன் பெற்ற கிளை இல்லை என்றால் உங்கள் சர்ச்சையைத் தீர்க்க முடியாது. எனவே, சர்ச்சையைத் தொடங்கும் நேரத்தில் உங்களிடமிருந்து கிளை விவரங்களை சேகரிக்கும் செயல்முறையை நாங்கள் தானியங்குப் படுத்தியுள்ளோம். கிளை விவரங்களை வழங்குவது, வங்கி உங்கள் சர்ச்சையை சரியான கிளைக்குத் திருப்ப உதவும், இது சர்ச்சை செயல்முறையை விரைவுபடுத்த உதவும். ஒருவேளை உங்களிடம் கிளை விவரங்கள் இல்லையென்றால், நீங்கள் தொடர்புடைய கடன் நிறுவனத்தைத் தொடர்புக் கொள்ள வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட அக்கவுண்ட்டில்/விசாரணையில் நான் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட வகையான சர்ச்சையை எழுப்ப முடியாது?
நீங்கள் ஒரு அக்கவுண்ட்/விசாரணையின் உடைமை அல்லது புலங்களை சர்ச்சை செய்யலாம்.
நீங்கள் உடைமையை மறுத்திருந்தால் (உங்களுக்கு சொந்தம் இல்லாத அக்கவுண்ட்) பிற புலங்களை மறுப்பது பொருந்தாது.
உங்களுக்கு சொந்தமான ஒரு குறிப்பிட்ட அக்கவுண்ட்/விசாரணைக்கு நீங்கள் புலத்தை மறுக்கிறீர்கள் என்றால், உடைமையை மறுப்பது பொருந்தாது.
மேலும் அறிய இந்த வீடியோ இணைப்பைக் கிளிக் செய்க.
நான் ஒரு சர்ச்சையை எழுப்பியவுடன் CIBIL என்ன செய்யும்?
நீங்கள் சர்ச்சையை சமர்ப்பித்தவுடன் CIBIL சர்ச்சையை உள்ளகத்தில் சரிபார்த்து, சம்பந்தப்பட்ட கடன் நிறுவனத்திடம் அனுப்பும். CI சர்ச்சைக் கோரிக்கைக்கு பதிலளித்தவுடன், CIBIL உடனடியாக மாற்றங்களை புதுப்பிக்கும் (பொருந்தினால்), மற்றும் ஈமெயில் மூலம் உங்களுக்கு நிலையைத் தெரிவிக்கும்.
சர்ச்சைத் தீர்க்கும் செயல்முறையைப் புரிந்து கொள்ளஇங்கே கிளிக் செய்யவும்.
என் சர்ச்சையின் நிலை எனக்கு எப்படித் தெரியும்?
நீங்கள் 7 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் சர்ச்சையின் நிலை குறித்த தானியங்கு ஈமெயில் அறிவிப்பைப் பெறுவீர்கள்.
நான் என் CIBIL அறிக்கையில் தகவல்களைத் திருத்துவதற்காக ஒரு சர்ச்சையை எழுப்பினேன், ஆனால், ஏன் என் கடன் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒரு அறிவிப்பு வந்துள்ளது?
கடன் நிறுவனம் அங்கீகரிக்கும் வரை CIBIL உங்கள் CIBIL அறிக்கையில் மாற்றங்கள் செய்ய முடியாது. கடன் நிறுவனம் வழங்கியத் தகவலின் அடிப்படையிலான தரவை CIBIL புதுப்பிக்க முடியாது அல்லது உங்கள் சர்ச்சையைக் கடன் நிறுவனம் நிராகரித்திருக்கலாம். மேலும் விவரங்களுக்கு நீங்கள் சம்பந்தப்பட்ட கடன் நிறுவனத்தை (CI) நேரடியாகத் தொடர்புக் கொள்ள வேண்டும், அல்லது நீங்கள் மீண்டும் ஒரு சர்ச்சையை எழுப்பலாம் மற்றும் நாங்கள் தொடர்புடைய CI இடம் மீண்டும் சரிபார்ப்போம்.
அறிக்கையைப் புதுப்பிப்பதற்கு முன்பு CIBIL ஏன் நுகர்வோருடன் தகவல்களைச் சரிபார்ப்பதில்லை?
உங்கள் CIBIL அறிக்கையில் உள்ள தகவல் கடன் நிறுவனங்கள்(Cis) CIBIL-ற்கு தெரிவித்தபடி இருக்கும். உண்மையை CIBIL-ற்கு துல்லியமாகத் தெரிவிப்பது CI-களின் பொறுப்பாகும். இந்தத் தகவலை சேகரித்து அனைத்து CI-க்கும் துல்லியமாகப் புதுப்பிப்பது CIBIL-இன் பொறுப்பாகும். ஒருவேளை உங்கள் CIBIL அறிக்கையில் ஏதாவது தரவு தவறுகளைக் கண்டால் நீங்கள் சர்ச்சைத் தீர்வு செயலாக்கத்தைத் தொடங்கலாம் மற்றும் நாங்கள் சம்பந்தப்பட்ட CI இடம் தவறுகளை சரிபார்ப்போம். உங்கள் CIBIL அறிக்கையில் பிரதிபலிக்க வேண்டிய எந்த மாற்றமும் CIBIL பதிவுகளில் புதுப்பிக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட CI-ஆல் அங்கீகரிக்கப்பட வேண்டும்..
சர்ச்சையின் முடிவுகளில் நான் திருப்தி அடையவில்லை என்றால் என்ன செய்வது?
நீங்கள் சம்பந்தப்பட்ட கடன் நிறுவனத்தை (CI) நேரடியாகத் தொடர்புக் கொள்ளத் தேர்வு செய்யலாம். மாறாக, நீங்கள் மீண்டும் ஒரு சர்ச்சைக் கோரிக்கையைத் தொடங்கலாம், மற்றும் நாங்கள் அதை சம்பந்தப்பட்ட CI உடன் மீண்டும் சரிபார்ப்போம். தயவுசெய்து கவனிக்கவும், தொடர்புடைய CI உறுதிப்படுத்தாமல் எங்களால் உங்கள் CIBIL அறிக்கையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
நான் ஏன் அறிக்கை குறித்த சில தகவல்கள் சர்ச்சையில் உள்ளன என்னும் செய்தியை காண்கிறேன்? இதன் அர்த்தம் என்ன?
ஒரு விழிப்பூட்டல் (கீழே உள்ள படத்தில் முன்னிலைப்படுத்தியது) உங்கள் CIBIL அறிக்கையின் சில பகுதிகளில் உள்ளத் தகவல் சர்ச்சைக்குரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைத் தீர்க்கப்பட்ட பிறகு தான் விழிப்பூட்டல் அறிக்கை நீக்கப்படும்.
30 நாட்களுக்குள் இந்த சர்ச்சையை CI தீர்க்கவில்லை என்றால் CIBIL என்ன நடவடிக்கை எடுக்கும்?
சம்பந்தப்பட்ட கடன் நிறுவனத்தின் உறுதிப்படுத்தல் இல்லாமல் CIBIL தரவு தளத்தில் எந்த தகவலையும் திருத்த முடியாது. சர்ச்சை தீர்க்கப்படும் வரை எங்கள் தானியங்கி செயல்முறை, வங்கி/CI-க்கு தினசரி நினைவூட்டல் அனுப்பும்.
வங்கி சர்ச்சைக்கு பதிலளித்தவுடன் தகவல்களை புதுப்பிக்க CIBIL எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும்?
கடன் நிறுவனத்திலிருந்து (CI) திருத்தப்பட்ட தரவு எங்களுக்குக் கிடைத்தவுடன், நாங்கள் எங்கள் பதிவேடுகளை உடனடியாகப் புதுப்பிப்போம்.
என் அக்கவுண்ட் 2 மாதங்களுக்கு மேலாக புதுப்பிக்கப்படவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் அக்கவுண்ட் புதுப்பிக்கப்படாததற்கு 2 காரணங்கள் இருக்கலாம்:
நீங்கள் உங்கள் கடன் நிறுவனத்தை நேரடியாக தொடர்புக் கொண்டு அவர்களிடம் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரலாம்.
நான் என் அக்கவுண்ட் விவரங்களை புதுப்பிப்பதற்கு CI ஐ அணுகியுள்ளேன், எனினும், எனக்கு எந்தத் தகவலும் ஏன் கிடைக்கவில்லை?
நீங்கள் CIBIL அறிக்கையிலுள்ள உங்கள் அக்கவுண்ட்டைப் புதுப்பிப்பதற்கு கடன் நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புக் கொண்டிருந்தால், உங்களுக்குத் தகவல் அனுப்ப வேண்டியது CI-இன் பொறுப்பாகும். உங்கள் அக்கவுண்ட்டின் புதுப்பிக்கப்பட்ட நிலையைப் பற்றி தெரிந்துக்கொள்ள நீங்கள் உங்கள் கடன் நிறுவனத்தை தொடர்புக் கொள்ள வேண்டும். மாறாக, உங்கள் அக்கவுண்ட்டின் புதுப்பிக்கப்பட்ட நிலையைத் தெரிந்துக்கொள்ள நீங்கள் இங்கு கிளிக் செய்யலாம்.