Skip to main content

ஸ்கோர் சிமுலேட்டர்

உங்கள் கடன் செயல்பாடுகள் உங்கள் CIBIL மதிப்பெண்ணை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஸ்கோர் சிமுலேட்டர் என்றால் என்ன?

ஸ்கோர் சிமுலேட்டர் என்பது உங்களுக்கு இருக்கும் CIBIL அறிக்கையின் பல்வேறு கடன் போக்குகளை உருவகப்படுத்தி மற்றும் உருவகப்படுத்திய CIBIL மதிப்பெண்ணை உருவாக்கும் கருவியாகும். இந்த அம்சம் பல்வேறு கடன் போக்குகள் உங்களுக்கு இருக்கும் CIBIL மதிப்பெண்ணை எவ்வாறு பாதிக்கும் என்றும் அதனால், நீங்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

ஸ்கோர் சிமுலேட்டர் எவ்வாறு செயல்படுகிறது?

<pஸ்கோர் சிமுலேட்டர் உங்களைப் பல்வேறு உருவகப்படுத்துதல்களிலிருந்து தேர்வு செய்ய அனுமதிக்கிறது - அவை

  • திறப்பது/மூடுவது அல்லது புதிய லோன் அக்கவுண்ட்கள்
  • கிரெடிட் கார்டுகளின் நிலுவைத் தொகையை செலுத்துதல்
  • செயல்பாட்டில் உள்ள உங்கள் லோன் அக்கவுண்ட்களில் கட்டணங்களைத் தாமதமாகச் சேர்த்தல்

ஒரு குறிப்பிட்ட உருவகப்படுத்துதலைத் தேர்ந்தெடுக்கும் போது, எ.கா. உருவகப்படுத்துதலுக்குத் தேவையான சில கூடுதல் விவரங்கள் உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் புதிய கிரெடிட் கார்டைச் சேர்க்க தேர்வு செய்தால், உங்களிடம் 'கடன் வரம்பு' கேட்கப்படும். கூடுதல் விவரங்களை உள்ளிடுகையில், உங்கள் உருவகப்படுத்தப்பட்ட CIBIL மதிப்பெண்ணை நீங்கள் சரிபார்க்க முடியும்.

 

ஸ்கோர் சிமுலேட்டரை நான் எங்கு காணலாம்?

நீங்கள் ஸ்கோர் சிமுலேட்டரை அணுகுவதற்கு உங்களிடம் கட்டணம் செலுத்திய செயற்படும் சந்தா (1-மாதம், 6-மாதங்கள் அல்லது 1 வருட வரம்பற்ற அணுகல்) இருக்க வேண்டும். உங்களிடம் கட்டணம் செலுத்திய செயற்படும் சந்தா இருந்தால், உங்கள் CIBIL அக்கவுண்ட்டிலுள்ள ஸ்கோர் சிமுலேட்டர் தாவலின் கீழ் உள்ள ஸ்கோர் சிமுலேட்டர் கருவியை நீங்கள் அணுக முடியும்.

உங்களிடம் ஏற்கனவே கட்டணம் செலுத்திய சந்தா இருந்தால்,இப்போது லாக்-இன் செய்து சரிபார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

 

இந்த ஸ்கோர் சிமுலேட்டரைப் பயன்படுத்துவதால் என் மதிப்பெண் பாதிக்கப்படுமா?

ஸ்கோர் சிமுலேட்டர் ஏற்கனவே இருக்கும் உங்கள் CIBIL மதிப்பெண்ணைப் பாதிக்காது. ஸ்கோர் சிமுலேட்டரைப் பயன்படுத்துவது உங்கள் CIBIL அறிக்கையில் எந்த தரவையும் மாற்றாது/புதுப்பிக்காது. ஸ்கோர் சிமுலேட்டர் பல்வேறு கடன் போக்குகள் உங்கள் CIBIL மதிப்பெண்ணை எவ்வாறு பாதிக்கும் என்பதை மட்டும் சுட்டிக்காட்டும்.

 

ஸ்கோர் சிமுலேட்டர் எனக்கு எவ்வாறு உதவும்?

லோன் விண்ணப்பச் செயல்பாட்டில் CIBIL மதிபெண் ஒரு முக்கிய பங்கு கொண்டுள்ளது. பல்வேறு கடன் போக்குகள் உங்கள் CIBIL மதிப்பெண்ணை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை புரிந்துகொள்வது, நீங்கள் உங்கள் நிதி கொள்கைகளை அடைவதற்கு தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும்.

சட்ட மறுப்பு: உங்கள் CIBIL மதிப்பெண்ணை வெவ்வேறு கடன் சூழல்கள் எவ்வாறு பாதிக்கபடக்கூடும் என்பதைப் புரிந்து கொள்ள உதவும் வகையில் ஸ்கோர் சிமுலேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், ஸ்கோர் சிமுலேட்டரை எந்தவொரு முடிவுக்கும் உத்தரவாதம் அளிக்கும் ஒரு கணிப்பு கருவியாகப் பயன்படுத்த முடியாது. இந்த சிமுலேட்டர் தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மற்றும் பயனரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சூழல்களின் அடிப்படையில் ஒரு கற்பனையான மதிப்பெண்ணின் சுட்டிக்காட்டியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இது ஒரு மதிப்பீடு மட்டுமே தவிர இது உத்தரவாதமான முடிவை வழங்காது. TransUnion CIBIL எந்தவொரு பிழைகள் அல்லது குறைகளுக்கும் கடமைப்பட்டோ அல்லது பொறுப்பாகவோ இருக்காது, இதில் தொழில்நுட்ப தவறுகளும் அடங்கும். மேலும், இந்த சிமுலேட்டரால் வழங்கப்பட்ட தகவல்/கருவிகளின் முடிவை அடிப்படையாகக் கொண்டு/அல்லது நம்பகத்தன்மையுடன் எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவுகளின் அல்லது செயல்களின் விளைவுகளுக்கும் TransUnion CIBIL பொறுப்பேற்காது. TransUnion CIBIL எந்தவொரு வகையிலும் பயனருக்கு ஏற்படும் இழப்புகள்/கோரிக்கை கள்/சேதங்களுக்கு கடமைப்படாது மற்றும்/அல்லது பொறுப்பேற்காது. TransUnion CIBIL அத்தகைய அனைத்துப் பொறுப்புகளையும் மறுக்கிறது.