CIBIL, அதன் தயாரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பாக பொதுவான கேள்விகளுக்கு பதில் பெறவும்.
உங்களுடையதை இப்போது பெறுங்கள்1. CIBIL மதிப்பெண் என்றால் என்ன, மற்றும் எனது CIBIL மதிப்பெண்ணை என்ன காரணிகள் பாதிக்கின்றன?
CIBIL மதிப்பெண் என்பது உங்கள் கடன் வரலாற்றின் 3 இலக்க எண் சுருக்கமாகும், இது உங்கள் CIBIL அறிக்கையில் உள்ள 'அக்கவுண்ட்கள்' மற்றும் 'விசாரணைகள்' பிரிவுகளில் காணப்படும் விவரங்களைப் பயன்படுத்தி பெறப்படுகிறது மற்றும் இது 300 முதல் 900 வரை இருக்கும். உங்கள் மதிப்பெண் 900-ற்கு நெருக்கமாக இருந்தால், உங்கள் லோன் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
இந்த வீடியோவைப் பாருங்கள் சிபில் பற்றி மேலும் அறிய
2. நான் என் CIBIL மதிப்பெண்ணை எவ்வாறு மேம்படுத்துவது?
ஒரு நல்ல கடன் வரலாற்றைப் பராமரிப்பதன் மூலம் உங்கள் CIBIL மதிப்பெண்ணை மேம்படுத்தலாம், மற்றும் இது கடன் வழங்குநர்களின் லோன் ஒப்புதலுக்கு அவசியமாகும். இந்த 6 படிகளைப் பின்பற்றுவது, உங்கள் மதிப்பெண்ணை மேம்படுத்த உதவும்:
3. நான் என் அறிக்கையில் ஒரு தவறைக் காண்கிறேன். நான் ஒரு சர்ச்சையை எப்படி எழுப்புவது? சர்ச்சையைத் தீர்க்க எவ்வளவு காலம் ஆகும்?
எங்களுடன் ஒரு சர்ச்சையைத் தொடங்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் சர்ச்சை செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்
இங்கே கிளிக் செய்கஇங்கே கிளிக் செய்க
குறிப்பு– ஆன்லைன் சர்ச்சைப் படிவத்தில் (அதாவது தனிப்பட்ட, தொடர்பு, வேலைவாய்ப்பு, அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் விசாரணை) ஒவ்வொரு பகுதிக்கும் செல்வதன் மூலம் உங்கள் அறிக்கையில் பல புலங்கள் மற்றும் தகவல்களை ஒரே புகாரில் நீங்கள் சர்ச்சைப் பதிவு செய்யலாம்.
சர்ச்சை சமர்ப்பிக்கப்பட்டதும், CIBIL உங்கள் கடன் அறிக்கையில் தொடர்புடைய புலம்/அக்கவுண்ட்/பகுதியை "சர்ச்சையின் கீழ் உள்ளது" என்று குறிப்பிடும்.
ஒரு சர்ச்சையைத் தீர்க்க கிட்டத்தட்ட 30 நாட்கள் ஆகலாம், இது கடன் நிறுவனம் பதிலளிக்க எடுத்துக்கொள்ளும் காலத்தைப் பொறுத்தது.