தனிப்பயனாக்கப்பட்ட லோன் சலுகைப் பிரிவு என்றால் என்ன?
CIBIL வழங்கும் ஆன்லைன் தளத்தில், பங்கேற்கும் கடன் வழங்கநர்களிடமிருந்து நுகர்வோர் தனிப்பயனாக்கப்பட்ட கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளை ஒரே பார்வையில் பெறலாம். இந்தச் சலுகைகள் உங்கள் CIBIL மதிப்பெண், வருமானம் மற்றும் பிற அளவுருக்களின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்படுகின்றன. இந்த அணுகல் 3 மாதங்களுக்கு கூடுதல் செலவு அல்லது கட்டணம் இல்லாமல் செல்லுபடியாகும்! இது முற்றிலும் இலவசமானது. உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட லோன் சலுகைகளைக் காண இங்கு கிளிக் செய்யவும்

How to apply for a loan?

*லோன் ஒப்புதல் கடன் வழங்குநர்கள் கடன் கொள்கையின்படி ஆவணச் சோதனை மற்றும் சரிபார்ப்புக்கு உட்பட்ட.

 

இந்த தனிப்பயனாக்கப்பட்ட லோன் சலுகைகளை நான் எப்படி அணுகுவது?

  • உங்கள் டாஷ்போர்டிலுள்ள 'தனிப்பயனாக்கப்பட்ட லோன் சலுகைகள்' பிரிவில் உள்ள 'சலுகைகளைக் காண லாக்-இன் செய்யவும்' பொத்தானைக் கிளிக் செய்யவும்.

how to apply for a loan

 

  • உங்கள் 10-இலக்க கட்டுப்பாட்டு எண் மற்றும் CIBIL மதிப்பெண்ணைப் பயன்படுத்தி லாக்-இன் செய்யவும்.
  • உங்கள் தனிப்பட்ட விவரங்களான பெயர், முகவரி போன்றவற்றை அளித்து மற்றும் உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட லோன் சலுகைகளை அணுகவும்.

 

தனிப்பயனாக்கப்பட்ட லோன் பெறுவதற்கு என்ன விவரங்கள் தேவைப்படும்?

  • இது எண்ணிலக்க மதிப்பு/NA/NA/நோ ஹிட் (CIBIL அறிக்கை 3 மாதங்க்களுக்கு மேற்பட்டதாக இருக்கக் கூடாது)
  • கட்டுப்பாட்டு எண்: இது உங்கள் CIBIL அறிக்கையின் வலது மேல் புறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் 10-இலக்க எண்ணாகும்.
  • நீங்கள் உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையைப் பெறும் போது, தயவுசெய்து உங்கள் வருமான விவரங்களைத் துல்லியமாக உள்ளிடுவதை உறுதி செய்யவும். ஏனென்றால், இது நீங்கள் தகுதி பெறும் சலுகைகள் உங்கள் லோன் சலுகைகளில் காட்டப்படுவதை உறுதி செய்யும்.
  • தவறான வருமான விவரம் என்பது தவறான சலுகைத் தகுதியாகும், மற்றும் இது சரிபார்ப்பின் போது கடன் வழங்குநர்களால் நிராகரிக்கப்படலாம்.

 

தனிப்பயனாக்கப்பட்ட லோன் சலுகையில் என்ன தயாரிப்புகள் கிடைக்கும்?

தற்போது நீங்கள் - கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், வீட்டு லோன், வணிக லோன், வாகன லோன், தங்க லோன் மற்றும் சொத்து மீதான் லோன்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகள் பெறலாம். எந்தவொரு தயாரிப்பிற்கும் சலுகையளிப்பது என்பது பங்கேற்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு மட்டும் உண்டு என்பதை நினைவில் கொள்ளவும்.

 

நான் லோன்/கிரெடிட் கார்டு சலுகைக்கு விண்ணப்பித்த பின் என்ன ஆகும்?

நீங்கள் ஒரு சலுகையைத் தேர்வு செய்த பின் தொடர்புடைய கடன் வழங்கநர் உங்களைத் தொடர்புக் கொள்வார். தயவுசெய்து நீங்கள் உள்ளிட்ட விவரங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்யவும். இது கடன் வழங்கநர் உங்களை விரைவாக அணுக உதவும். நீங்கள் லோன்/கிரெடிட் கார்டு சலுகையைத் தேர்வு செய்யும்போது மாற்று தொடர்பு விவரமும் அளிக்கலாம்.