Skip to main content

இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை

இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை என்றால் என்ன?  
CIBIL வருடத்திற்கு ஒரு முறை கட்டணம் இல்லாமல் உங்களுக்கு ஒரு CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை வழங்கும்.

 

நான் CIBIL-யிடமிருந்து இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை எப்படிப் பெறுவது?

நீங்கள் ஏற்கனவே ஒரு உறுப்பினராக இருந்தால் myCIBIL-இல் லாக்-இன் செய்து திரையின் வலது மேல் புறத்தில் உள்ள 'என் அக்கவுண்ட்' தாவலுக்குச் சென்று மற்றும் அந்தப் பக்கத்திலுள்ள 'உங்கள் இலவச அறிக்கையை பெறுங்கள்' இணைப்பை கிளிக் செய்யவும். லாக்-இன் செய்வதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

நீங்கள் ஒரு உறுப்பினர் இல்லையென்றால், உங்கள் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்ற இங்கு கிளிக் tசெய்யவும்.

என்னுடைய "என் அக்கவுண்ட்" பக்கத்தில் 'உங்கள் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை பெறவும்' இணைப்பைப் பார்க்க முடியவில்லை.

என் அக்கவுண்ட்' பக்கத்தில் 'உங்கள் இலவச அறிக்கையைப் பெறுங்கள்' இணைப்பை நீங்கள் காணவில்லையென்றால், நீங்கள் ஏற்கனவே அந்த வருடத்திற்கான இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கைக்கு விண்ணப்பித்திருக்கலாம். நீங்கள் எங்கள் வரம்பற்ற திட்டங்களில் ஒன்றை வாங்கியிருந்தால், 'உங்கள் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை பெறவும்' இணைப்பு உங்கள் வரம்பற்ற திட்டம் காலாவதி ஆன பின் கிடைக்கும்.


ஒரு வருடத்திற்குள் எனக்கு மற்றொரு CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை தேவைப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் இந்த வருடத்திற்கான உங்கள் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை ஏற்கனவே பெற்றிருந்து மற்றும் தொடர்ந்து உங்கள் கடன் வரலாற்றைக் கண்காணிக்க விரும்பினால், நீங்கள் எங்கள் வரம்பற்ற அணுகல் திட்டத்தில் ஒன்றை வாங்கலாம். மேலும் தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.


என்னால் அடையாளச் சரிபார்ப்பை முடிக்க முடியவில்லை, இப்போது எனக்கு என்னுடைய இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை எப்படி கிடைக்கும்?
ஒருவேளை உங்கள் ஆன்லைன் அங்கீகரிப்பு வெற்றி பெறவில்லையென்றால், நீங்கள் CIBIL வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்பு கொண்டு உங்கள் அடையாளச் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். நீங்கள் சரிபார்ப்பு செயல்முறையை முடித்தவுடன் நீங்கள் உங்கள் அக்கவுண்ட்டை அணுக முடியும்.


என் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையையுடன் எனக்கு வேறு என்ன கூடுதல் அம்சங்கள் கிடைக்கும்?
உங்கள் CIBIL மதிப்பெண்ணின் அடிப்படையில் உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட லோன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகள் கிடைக்கும். உங்கள் CIBIL அறிக்கையில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது தவறுகள் பிரதிபலிப்பதைக் கண்டால் நீங்கள் ஆன்லைனிலும் சர்ச்சை எழுப்பலாம்.


நோ ஹிட் என்றால் என்ன?

இதற்கு நீங்கள் சமர்ப்பித்த விவரங்களின் அடிப்படையில், எங்களால் உங்கள் கடன் அறிக்கையைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று அர்த்தமாகும். இருந்தாலும், நீங்கள் உங்கள் myCIBIL அக்கவுண்ட்டைச் சரிபார்த்து மற்றும் லோன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளுக்கு லோன் சலுகைப் பிரிவு மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதாவது நிதி நிறுவனம் உங்கள் கடன் செயற்பாடு தொடர்பாக அறிவித்தால் அல்லது தகவல் சமர்ப்பித்தால் உங்களுக்கு உங்கள் அறிக்கை கிடைக்கும். . உங்கள் அறிக்கை கிடைப்பதைச் சரிபார்க்க தொடர்ந்து உங்கள் myCibil அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்யவும்.

 

என் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையில் தவறுகள் இருந்தால் நான் எப்படி சர்ச்சை எழுப்புவது?
எங்களுடன் ஒரு சர்ச்சையைத் தொடங்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் சர்ச்சை செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்.

மேலும் அறிய இந்த வீடியோ இணைப்பைக் கிளிக் செய்க.

 


குறிப்பு– ஆன்லைன் சர்ச்சைப் படிவத்தில் (அதாவது தனிப்பட்ட, தொடர்பு, வேலைவாய்ப்பு, அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் விசாரணை) ஒவ்வொரு பகுதிக்கும் செல்வதன் மூலம் உங்கள் அறிக்கையில் பல புலங்கள் மற்றும் தகவல்களை ஒரே புகாரில் நீங்கள் சர்ச்சைப் பதிவு செய்யலாம்.
சர்ச்சை சமர்ப்பிக்கப்பட்டதும், CIBIL உங்கள் கடன் அறிக்கையில் தொடர்புடைய புலம்/அக்கவுண்ட்/பகுதியை "சர்ச்சையின் கீழ் உள்ளது" என்று குறிப்பிடும்..

ஒரு சர்ச்சையைத் தீர்க்க கிட்டத்தட்ட 30 நாட்கள் ஆகலாம், இது கடன் நிறுவனம் பதிலளிக்க எடுத்துக்கொள்ளும் காலத்தைப் பொறுத்தது.