Skip to main content

தங்க லோன்:

தங்க லோன் என்றால் என்ன?

தங்க லோன் (தங்கத்தின் மீதான லோன் என்றும் அழைக்கப்படும்) என்பது கடன் வாங்குபவர்கள் தங்கள் தங்க பொருட்களை (18-24 காரட் வரம்பிற்குள்) கடன் வழங்குநரிடம் பிணையமாக அடகு வைப்பதன் மூலம் எடுக்கப்படும் பாதுகாப்பான லோன் ஆகும். பொதுவாக தற்போதைய சந்தை மதிப்பு மற்றும் தங்கத்தின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக, 80% வரை லோன் தொகை அளிக்கப்படும்.

Return to top

தங்க லோன் எடுப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

தங்க லோன் என்பது பர்சனல் லோனைப் போல் உங்கள் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும், இதில் ஒரு சர்வதேச கல்வி, திருமணச் செலவுகள், மருத்துவ அவசரநிலைகள் அல்லது வேறு எந்த தனிப்பட்ட பயன்பாட்டையும் உட்படும்.

  • விரைவான வழங்கல் - தங்க லோன் அதன் பாதுகாப்பான தன்மையால் குறைந்தபட்ச ஆவணங்களுடன் விரைவான செயலாக்கத்திற்கு வழிவகுக்கிறது.
  • பயன்பாட்டின் நெகிழ்வுத்தன்மை - இதன் இறுதிப் பயன்பாடு கண்காணிக்கப்படாததால், இது லோனை எந்தவொரு செலவிற்கும் பயன்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையை அளிக்கும்.
  • பாதுகாப்பான லோன் வகை: நீங்கள் அடகு வைத்த தங்க ஆபரணங்களைத் தவிர, கடன் வழங்குநருக்கு நீங்கள் வேறு எந்த பாதுகாப்பு/பிணையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
  • குறைந்த வட்டி விகிதம்: தங்கம் பிணையாக இருப்பதால், பர்சனல் லோனுடன் ஒப்பிடும்போது தங்க லோனிற்கு வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.
  • உங்கள் பயனற்ற சொத்தை ரொக்கமாக்கவும்: அதிக பயனில்லாத சொத்தான தங்கம் பணத்தை உருவாக்குவதற்கு அரிதாக பயன்படுத்தப்படுகிறது. ஆதலால், தங்க லோன் என்பது மூலதனம் திரட்டுவதற்கு மற்றும் அந்த நிதியை உங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பணம் தேவைப்படும்போது பயன்படுத்துவதற்கு சரியான தீர்வாகும். இதற்கு உங்கள் வீட்டில் இல்லாத பாதுகாப்பு, வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் லாக்கரில் மிகுதியாகக் கிடைக்கும்.

Return to top

வழக்கமான வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்க கட்டணம் என்ன?

தங்க லோனிற்கான வட்டி விகிதங்கள் ஒரு கடன் வழங்குபவரிடமிருந்து மற்றொரு கடன் வழங்குபவருக்கு மாறுபடும் மற்றும் இது 9.24% முதல் 17% வரை இருக்கும். சில கடன் வாங்குநர்கள் லோன் தொகையின் 1-3% ஐ நியாயமான செயலாக்க கட்டணமாக வசூலிப்பார்கள். எப்போதும் லோன் எடுப்பதற்கு முன், வட்டி விகிதம், செயலாக்கக் கட்டணம், தாமதக் கட்டணம் மற்றும் முன் செலுத்தும் கட்டணம் ஆகியவற்றை பற்றி கடன் வழங்குநரிடம் சரிபார்த்து ஒப்பிடுவது நல்லதாகும்.

சரிபார்த்து, சலுகைகளை ஒப்பிட்டு மற்றும் லோனிற்கு விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்.

Return to top

லோன் விண்ணப்பத்தைச் செயலாக்க தேவைப்படும் ஆவணங்கள் என்ன?

தங்க லோனிற்கு தேவைப்படும் ஆவணங்கள் ஒரு கடன் வழங்குபவரிடமிருந்து மற்றொரு கடன் வழங்குபவருக்கு மாறுபடும். எனினும், பொதுவாக ஆவணப் பட்டியலில் உட்படுவது: பாஸ்போர்ட் அளவுப் புகைப்படம், அடையாள ஆதாரம் (PAN கார்டு, வாக்காளர் ஐடி, ஆதார் கார்டு போன்றவை) மற்றும் முகவரி ஆதாரம் (பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மின் ரசீது போன்றவை).

Return to top

நான் லோனை முன்கூட்டியே தீர்க்கலாமா? முன்கூட்டியே தீர்ப்பதற்கான கட்டணங்கள் இருக்கின்றனவா?

ஆம், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் லோனை முன்கூட்டியே தீர்க்கலாம். தங்க லோன்களுக்கு பெரும்பாலான கடன் வழங்குநர்கள் முன்கூட்டியே தீர்க்கும் கட்டணம் விதிப்பதில்லை, ஆனால் ஒரு சில கடன் வழங்குநர்கள் நிலுவையில் உள்ள அசல் தொகையில் 2-4% வரை விதிப்பார்கள். நீங்கள் கடன் வழங்குநரைத் தொடர்புக் கொண்டு அவர்கள் முன்கூட்டியே தீர்ப்பதற்கு பின்பற்றும் செயலாக்கம் பற்றித் தெரிந்துக்கொள்ளலாம்.

Return to top

நான் லோன் எடுப்பதற்கான காலங்கள் என்ன?

கடன் வழங்குநரைப் பொறுத்து தங்க லோன்கள் குறுகிய-கால லோன்களாக நெகிழ்வான காலவரையுடன் குறைந்தபட்சம் 1 மாதம் முதல் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் கொண்டவை.

Return to top

நீங்கள் எவற்றையெல்லாம் பார்க்க வேண்டும்?

உங்கள் தங்கத்தின் மீதான் தங்க லோன்கள் பாதுகாப்பானவை, லோனைத் திருப்பிச் செலுத்துவதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், மேலும் உங்களால் வசதியாகத் திருப்பிச் செலுத்தக்கூடிய மற்றும் உண்மையில் உங்களுக்குத் தேவைப்படும் லோன் தொகையை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் லோனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் கடன் மதிப்பெண் மற்றும் அறிக்கை உட்பட எதிர்கால கடன் விண்ணப்பத்தை ரத்து செய்யும் அளவிற்கு மோசமாக பாதிக்கும்.

உங்கள் லோன் தகுதியைச் சரிபார்த்து மற்றும் அதன் அடிப்படையில் நீங்கள் தகவலறிந்த முடிவு எடுப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

Return to top

என்னால் உரிய தேதியில் நிலுவையைத் தீர்க்க முடியவில்லை என்றால் என்ன ஆகும்?

தவறும் வாடிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஒரு கடன் வழங்குபவரிடமிருந்து மற்றொரு கடன் வழங்குபவருக்கு மாறுபடும். சில கடன் வழங்குநர்கள் தவறிய காலத்திற்கு விதிக்கும் கட்டணம், வாடிக்கையாளர் வழக்கமாக லோனிற்கு செலுத்தும் விகிதத்தை விட அதிகமாக இருக்கும். மேலும் லோன் செலுத்த தவறுவதின் விளைவாக உங்களுக்கு அனுப்பப்படும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட காலத்திற்குள் நீங்கள் உங்கள் கடன்களைத் தீர்க்க வேண்டும். இறுதி அறிவிப்பு தேதியில் லோன் செலுத்தப்படாவிட்டால், கடன் வழங்குநர்கள் நிலுவையிலுள்ள அவர்களது லோன் தொகையை மீட்க உங்கள் தங்க ஆபரணங்களை ஏலம் விடுவார்கள்.

Return to top