Skip to main content

உங்கள் கடன் மதிப்பெண்

மற்றும் அறிக்கையைப்

புரிந்துக்கொள்ளவும்

CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை என்றால் என்ன?

CIBIL மதிப்பெண் என்பது உங்கள் கடன் வரலாற்றின் மூன்று-இலக்க எண் சுருக்கமாகும். மதிப்பெண் CIBIL அறிக்கையில் காணப்படும் கடன் வரலாற்றைப் பயன்படுத்தி எடுக்கப்படும் (CIR என்றும் அழைக்கப்படும், அதாவது கடன் தகவல் அறிக்கை). ஒரு CIR என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கடன் வகைகள் மற்றும் கடன் நிறுவனங்களில் ஒரு தனிநபர் செலுத்தும் கடன் வரலாறு ஆகும். CIR-ல் உங்கள் சேமிப்பு, முதலீடுகள் அல்லது வைப்பு நிதி விவரங்கள் இருக்காது.

 

உங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை கடன் மதிப்பெண் மற்றும் அறிக்கையை விட அதிகம்; உங்கள் மதிப்பெண்ணுடன் நீங்கள் செய்யக்கூடியது இன்னும் அதிகம்.

மேலும் அறிய கீழேயுள்ள வீடியோவைக் கிளிக் செய்க.

என் myCIBIL அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள என் அக்கவுண்ட் எண் மற்றும் உறுப்பினர் பெயர் விவரங்களை எவ்வாறு சரிபார்ப்பது?

அக்கவுண்ட் எண் மற்றும் உறுப்பினர் விவரங்களை சரிபார்க்க நீங்கள் உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை வாங்கலாம். இந்த அறிக்கையில் உங்கள் கடன் வரலாற்றிலுள்ள அனைத்து கடன் வழங்குநர்கள் மற்றும் தயாரிப்புகளின் முழு விவரங்கள் இருக்கும் மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை நீங்கள் சரிபார்க்க முடியும்.

 

மேலும் அறிய கீழேயுள்ள வீடியோவைக் கிளிக் செய்க

உங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள், இப்போது இந்திய பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது: 

Tamil | Malayalam | Kannada | Hindi | Telugu

 

நான் என் myCIBIL அறிக்கையை எப்படி படிப்பது?

ஒரு CIBIL அறிக்கையில் நீங்கள் பெற்ற வீட்டு லோன், வாகன லோன், கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், மற்றும் அதிகப்பற்று போன்ற விவரமானக் கடன் தகவல்கள் இருக்கும். நீங்கள் உங்கள் விரைவுக் குறிப்பிற்குஉங்கள் CIR ஆவணத்தைப் புரிந்து கொள்ளுங்களை இங்கே பதிவிறக்கம் செய்யலாம். நீங்கள் CIBIL அறிக்கை பற்றி பல்வேறு விவரங்களை விளக்கும் பயிற்சியைக் காணலாம். CIBIL அறிக்கையின் முக்கியப் பிரிவுகள் பின்வருமாறு:

 

 

  • CIBIL மதிப்பெண்

உங்கள் CIBIL மதிப்பெண் உங்கள் CIR-இல் "அக்கவுண்ட்ஸ்" மற்றும் "விசாரணைகள்" பிரிவில் 300-900-ற்கு இடையிலான மதிப்புகள் உங்கள் கடன் போக்கின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. பொதுவாக 700-ற்கு மேலான மதிப்பெண் சிறந்ததாகக் கருதப்படும்.

Cibil Score

  • தனிப்பட்ட தகவல்

    இதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் அடையாள எண்களான PAN, பாஸ்போர்ட் எண், வாக்காளர் எண் போன்றவை இருக்கும்.

    Personal Information
  • தொடர்புத் தகவல்

    இந்தப் பிரிவில் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அளிக்கப்பட்டிருக்கும், இதில் நான்கு முகவரிகள் வரை இருக்கும்

    Contact Information
  • வேலைவாய்ப்புத் தகவல்

    உறுப்பினரால் அறிவிக்கப்பட்ட (வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்) மாதாந்திர அல்லது வருடாந்திர வருமான விவரங்கள்.

    Employment Information
  • கணக்குத் தகவல்

    இந்தப் பிரிவில் கடன் வழங்குநர்களின் பெயர், கடன் வசதிகளின் வகை (வீடு, வாகனம், தனிநபர், ஓவர் டிராஃப்ட் போன்றவை), அக்கவுண்ட் எண்கள், உடைமை விவரங்கள், திறக்கப்பட்ட தேதி, கடைசியாகச் செலுத்திய தேதி, கடன் தொகை, தற்போதைய இருப்பு உள்ளிட்ட உங்கள் கடன் வசதிகளின் விவரங்கள், மேலும் உங்கள் மாதாந்திர பதிவேடு (3 ஆண்டுகள் வரை) ஆகியவை இருக்கும்.

    Account Information
  • விசாரணைத் தகவல்

    நீங்கள் ஒவ்வொரு முறையும் லோன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, தொடர்புடைய வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் CIR-ஐ அணுகும். கணினி இதைப் பற்றி உங்கள் கடன் வரலாற்றில் குறிப்பிடும். மேலும் இது "விசாரணைகள்" என்று குறிப்பிடப்படுகிறது.

 

கடன் தகவல் அறிக்கை (CIR)-இல் பயன்படுத்தப்படும் பல சொற்களின் அர்த்தம் என்ன?
உங்கள் CIR-ஐ நன்கு புரிந்து கொள்ள சொற்களஞ்சியத்தில் தேடவும்.

 

என்னிடம் ஆட்-ஆன் கடன் கார்டு இருக்கிறது. நான் கட்டணம் செலுத்த வேண்டாத போது விவரங்கள் என் அக்கவுட்ண்டில் ஏன் பிரதிபலிக்கின்றன?
முதன்மை மற்றும் ஆட்-ஆன் கிரெடிட் கார்டு இரண்டிலும் ஏற்படும் கட்டணச் செலுத்தல்களுக்கு முதன்மை கார்டு உரிமையாளர் பொறுப்பாவாரா என்பதைத் தெரிந்துக்கொள்வது முக்கியமாகும். செலுத்தல்களில் ஏற்படும் குறைகள் முதன்மை மற்றும் ஆட்-ஆன் கார்டு உரிமையாளர் இருவரின் CIR-இலும் பிரதிபலிக்கும்.

 

நான் உத்தரவாதம் அளிக்கும் கடன்கள் ஏன் என் அறிக்கையில் தோன்றுகின்றன?
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் லோன் தொகைக்குப் பாதுகாப்பாக சில லோன்களுக்கு உத்தரவாதம் அளிப்பவர் கேட்கப்படும். எந்தவொரு கடனுக்கும் உத்தரவாதம் அளிப்பவர் கடனைத் திருப்பிச் செலுத்துவதை உறுதி செய்வதற்கு சமமான பொறுப்பு கொண்டவராகும். எனவே, முதன்மை விண்ணப்பதாரர் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அவர் கடமையை மதிப்பார் என்று உத்தரவாதம் அளிப்பவர் கடனளிப்பவருக்கு உத்தரவாதம் அளிக்கிறார். முதன்மை விண்ணப்பதாரர் கடனை செலுத்துவதில் ஏதேனும் குறை இருந்தால், அது உங்கள் CIBIL மதிப்பெண்ணையும் பாதிக்கும்.

 

அறிக்கையில் என் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ள லோன் அக்கவுண்ட்டை என்னால் அடையாளம் காண முடியவில்லை. எனக்கு மேலும் விவரங்கள் கிடைக்குமா?

நீங்கள் உங்கள் லோன் அக்கவுண்ட் பற்றி மேலும் விவரங்களுக்கு உங்கள் CIBIL அறிக்கையிலுள்ள அக்கவுண்ட் தகவல் பிரிவில் பார்க்கலாம்.

(இங்கு கிடைக்கும் CIBIL சந்தா திட்டத்தில் உங்கள் கடன் சுயவிவரத்துடன் இணைந்திருக்கலாம்:  https://www.cibil.com/choose-subscription))

 

நான் வங்கியிலுள்ள என் அனைத்து அக்கவுண்ட்களையும் சரியான நேரத்தில் மூடிவிட்டு NOC வைத்திருக்கிறேன். இது ஏன் என் அறிக்கையில் நிலுவையில் உள்ளதாகக் காட்டுகிறது?
நீங்கள் கடன் நிறுவனத்திலிருந்து திருத்தப்பட்ட தரவு CIBIL-இல் சமர்ப்பிக்கப்பட்டதற்கு உறுதி பெற்றிருந்தால், நீங்கள்: https://www.cibil.com/choose-subscription- இல் அதன் புதுப்பிக்கப்பட்ட நிலையைக் காணலாம்.

 

விசாரணைகள் உங்கள் CIBIL மதிப்பெண்ணை பாதிக்குமா? மேலும் தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.

விசாரணைகள் உங்கள் CIBIL மதிப்பெண்ணை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள, இந்த வீடியோக்களைப் பிராந்திய இந்திய மொழிகளில் பாருங்கள்:

Tamil | Malayalam | Kannada | Hindi | Telugu

 

  தகவல் பாதுகாப்பு என்றால் என்ன?

TransUnion CIBIL-இல், நன்மைக்காக தகவல்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் வணிக மையத்தில் உள்ள எங்கள் நுகர்வோரின் தரவுடன், உங்கள் தகவல்களைப் பாதுகாக்கவும், அது பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் நாங்கள் முயற்சி செய்கிறோம். எனினும், மோசடிக்கு எதிரான இந்தத் தொடர் போராட்டத்தில் உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவை. கடன் மோசடி மற்றும் அடையாளத் திருட்டுக்கு இரையாவது எவ்வளவு எளிது என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? டிஜிட்டல் உலகில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், உங்கள் ரகசியத் தகவல்களை ஆன்லைனில் அம்பலப்படுத்தவும், உங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தவும் எண்ணற்ற வழிகள் உள்ளன.
சிற்றேடை பதிவிறக்கம் செய்யவும்