Skip to main content

நிறுவன சர்ச்சைத் தீர்வு

கீழேயுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் ஒரு சர்ச்சைக் கோரிக்கையைத் தொடங்கவும்

CIBIL நிறுவனக் கடன் தகவல் அறிக்கையில் (CCR) இருக்கும் நிறுவன விவரங்கள் உதாரணத்திற்கு: முகவரி, தொடர்பு போன்றவை, அக்கவுண்ட் தகவல் மற்றும் விசாரணைகள். உங்கள் CCR-இல் உள்ள ஏதாவது தகவல் தவறாக அல்லது புதுப்பிக்கப்பட வேண்டும் என்றால், நாங்கள் உங்கள் அறிக்கையை திருத்த/புதுப்பிக்க மகிழ்ச்சியுடன் உங்களுக்கு உதவி செய்வோம்.

நிறுவனக் கடன் தகவல் அறிக்கை (CCR) கடன் நிறுவனத்தால் CIBIL அல்லது CCR-இலிருந்து எடுக்கப்பட்டு வணிக நிறுவனத்தால் பெறப்பட்டதின் அடிப்படையில் சர்ச்சைக் கோரிக்கை எழுப்பப்படலாம். திருத்தக்கூடிய பல்வேறு தவறுகளைப் பற்றி புரிந்து கொள்வதற்கு தயவுசெய்து கீழே பட்டியலிடப்பட்ட சர்ச்சை வகைகளைப் பற்றி படிக்கவும்.

சர்ச்சை வகைகள்

1. நிறுவனம்/அக்கவுண்ட் விவரங்கள்:

- சர்ச்சை செய்யப்படக்கூடிய புலங்கள்:  

 

நிறுவன விவரங்கள்: அக்கவுண்ட் தகவல்கள்
  • நிறுவனப் பெயர்
  • கடன் வகை
  • நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரி
  • சொத்து வகைப்பாடு
  • நிறுவனத்தின் கிளை முகவரி
  • வழங்கப்பட்ட தேதி
  • தொலைபேசி எண்
  • வழங்கப்பட்ட தொகை/அதிக கடன்
  • PAN (நிறுவனம்)
  • தற்போதைய இருப்பு
  • விளம்பரதாரர்/இயக்குனர்/உரிமையாளர்/பங்காளர் பெயர்
  • வங்கி கருத்து
  • உறவுமுறை
  • நிலை
  • சட்ட அரசியலமைப்பு
  • தன்னிச்சையாக தவறியவர் என்று வகைப்படுத்தப்பட்ட தேதி
  • நகரம்
  • வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலை
  • மாநிலம்
  • வழக்கு தேதி
  • அஞ்சல் குறியீடு
  • வழக்குத் தொகை

2. உடைமை
நீங்கள் ஒரு அக்கவுண்ட் உரிமையாளருக்கான சர்ச்சையையும் எழுப்பலாம். ஒரு அக்கவுண்ட்டின் உரிமையாளர் என்பது உங்கள் நிறுவனத்தின் CCR-இல் ஒரு குறிப்பிட்ட அக்கவுண்ட் உங்களுக்கு சொந்தமானது அல்ல என்றும், அல்லது முழு அறிக்கையும் தவறானது என்றும் அர்த்தமாகும்.

 

3. நகல் அக்கவுண்ட்
ஒருவேளை அதே அக்கவுண்ட் உங்கள் CCR-இல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பிரதிபலித்தால் நீங்கள் திருத்தத்திற்கான கோரிக்கையைத் தொடங்கலாம்.

 

 சர்ச்சைத் தீர்வுச் செயலாக்கம்

Company dispute resolution banner_english

ஒரு சர்ச்சை கோரிக்கையைத் தொடங்க எளிதான வழி, முறையாக முடிக்கப்பட்ட ஆன்லைன் சர்ச்சைப் படிவத்தை சமர்ப்ப்பிப்பதாகும். ஒரு ஆன்லைன் சர்ச்சைக் கோரிக்கையைத் தொடங்க தயவுசெய்து கீழே கிளிக் செய்யவும்.

வணிக நிறுவனங்கள் தங்கள் CCR-இல் பிரதிபலிக்கும் தவறான தரவுகளுக்கு CIBIL உடன் சர்ச்சை எழுப்பலாம். CIBIL இந்த சேவைக்கு வணிக நிறுவனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. மாறாக, நீங்கள் பின்வரும் முகவரியில் எங்களுக்கு எழுதுவதன் மூலம் ஒரு சர்ச்சைக் கோரிக்கையை எழுப்பலாம்: TransUnion CIBIL Limited, ஒன் இந்தியாபுல்ஸ் மையம், டவர் 2ஏ, 19 வது மாடி, சேனாபதி பாபாட் மார்க், எல்பின்ஸ்டன் சாலை, மும்பை - 400 013.

சர்ச்சை வகைகள்

நிறுவனம்/அக்கவுண்ட் விவரங்கள்

உடைமை

நகல் அக்கவுண்ட்