Skip to main content

CIBIL ஸ்கோர் என்றால் என்ன?

what is cibil score

CIBIL ஸ்கோர் - ஒரு விரிவான வழிகாட்டி

CIBIL ஸ்கோர் ஒருவரது கடன்பெறு தகுதியைக் குறிக்கும் 3 இலக்க எண். கடன் குறித்த உங்கள் பொறுப்பையும் நீங்கள் திருப்பிச் செலுத்தும் விதம் குறித்தும் கடன் வழங்குபவர்கள் புரிந்துகொள்ள இது உதவுகிறது. இந்த மூன்று இலக்க ஸ்கோர் எவ்வளவு முக்கியம்? இந்த வழிகாட்டி அதை உங்களுக்கு விளக்குகிறது.

CIBIL ஸ்கோரைப் புரிந்துகொள்ளுதல்

CIBIL ஸ்கோர் மற்றும் ரிப்போர்ட் ஒரு ஃபைனான்ஷியல் ரிப்போர்ட் கார்டைப் போன்றது. 300க்கும் 900க்கும் இடைப்பட்ட இவ்வெண், ஒருவர் கடன் குறித்து எவ்வளவு பொறுப்பாக இருந்துவந்துள்ளார் என்பதைக் கடன் வழங்குவோருக்குத் தெரிவிக்கிறது. இதை நம்பிக்கை ஸ்கோர் எனலாம். ஒருவர் வாங்கிய கடனை நேரத்தில் திருப்பிச் செலுத்தும்போது, அவர் மீதான நம்பிக்கை வளர்கிறது. இந்நம்பிக்கை அவரது CIBIL ஸ்கோரில் தெரிகிறது. அதிக ஸ்கோர் பெற்ற ஒருவரை கடன்பெற அதிகத் தகுதி பெற்றவராகக் கடன் வழங்குவோர் கருதுவர்.

CIBIL ஸ்கோர் எப்படி கணக்கிடப்படுகிறது?

ஒரு தனிநபர் இதுவரை பெற்றுள்ள கிரெடிட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் CIBIL ஸ்கோரில் பின்வருவன அடங்கும்:

·       பேமெண்ட் ஹிஸ்ட்ரி: நீங்கள் சரியான நேரத்தில் உங்கள் பில்களை செலுத்திவந்திருக்கிறீர்களா?

·       கிரெடிட் பயன்பாடு: நீங்கள் கிரெடிட்டை  எவ்வளவு கவனமாகப் பயன்படுத்திவந்திருக்கிறீர்கள்?

·       கிரெடிட் ஹிஸ்ட்ரியின் காலஅளவு: நீங்கள் எவ்வளவு காலமாக கிரெடிட்டை நிர்வகித்து வருகிறீர்கள்?

·       கிரெடிட் மிக்ஸ்: நீங்கள் பல்வேறு வகையான கிரெடிட்களைப் பெற்றுப் பயன்படுத்தியுள்ளீர்களா?

·       புதிய கிரெடிட்: புதிய  கிரெடிட்டுக்கு எத்தனை முறை விண்ணப்பித்துள்ளீர்கள்?

 

இக்காரணிகள் ஒன்றிணைந்து உங்கள் CIBIL ஸ்கோரை உருவாக்குகின்றன.

உயர்ந்த CIBIL ஸ்கோரின் நன்மைகள்

உயர்ந்த CIBIL ஸ்கோர் சிறந்த நிதி வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. உயர்ந்த ஸ்கோர் இவற்றில் உங்களுக்கு உதவும்:

·       லோன்களுக்கு விண்ணப்பித்தல்: வீட்டு லோன், கார் லோன், தனிநபர் லோன் இவற்றில் எதுவாக இருந்தாலும், உயர்ந்த ஸ்கோர் நீங்கள் லோன் பெறும் வாய்ப்புகளை அதிகரிப்பதோடு சிறந்த வட்டி விகிதங்களைப் பெறவும் உதவும்.

·       கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தல்: அது தனிநபர்கள் கிரெடிட் கார்டுகள் பெற அனுமதிக்கப்படும் வாய்ப்புகளை மேம்படுத்துகிறது; குறிப்பிட்ட கார்டுகளுக்கு முன்கூட்டிய அனுமதியும் வழங்கப்படலாம்.

 

உயர்ந்த ஸ்கோரைப் பராமரித்தல்: நல்ல கிரெடிட் வழக்கங்கள்

 

நல்ல CIBIL ஸ்கோரை வைத்திருப்பதென்பது காலந்தவறாமல் செயல்பட்டு உங்கள் நிதியைக் கையாளுவதில் நீண்டகாலம் ஒழுங்காக இருப்பதாகும். அதற்கான சில எளிய வழக்கங்கள் இங்கே:

·       சரியான நேரத்தில் பில்களைச் செலுத்துதல்: தாமதமாகப் பணம் செலுத்துவதைத் தவிர்க்க, தானியங்கி செலுத்துதல்களையோ நினைவூட்டல்களையோ அமைக்கவும். கிரெடிட் லைன்களில் சரியான நேரத்தில் பணம் செலுத்துவது ஸ்கோரை மேம்படுத்த உதவும்; தாமதமாக பணம் செலுத்துவதைக் காட்டும் ஹிஸ்ட்ரி உங்கள் ஸ்கோரை எதிர்மறையாகப் பாதிக்கும்.

·       கிரெடிட் பயன்பாட்டைக் கட்டுக்குள் வைத்திருத்தல்: கிரெடிட் பயன்பாட்டு விகிதம் என்பது கிடைக்கும் மொத்த கிரெடிட்டுடன் ஒப்பிடும்போது பயன்படுத்தப்படும் மொத்த கிரெடிட்டின் சதவீதமாகும். அதை முடிந்தவரை உகந்ததாக வைத்திருப்பது நல்லது.

·       பழைய கணக்குகளை மூடாதிருத்தல்: கிரெடிட் ஹிஸ்ட்ரியின் காலஅளவு முக்கியமென்பதால் ஒழுங்காகத் திருப்பிச் செலுத்திய பதிவைக் காட்டும் பழைய கணக்குகளை மூடாமல் வைத்திருப்பது நலம்.

·       பல கிரெடிட் விண்ணப்பங்களைத் தவிர்த்தல்: குறுகிய காலத்தில் செய்யப்படும் அதிகமான என்கொயரிகள் ஸ்கோரைப் பாதிக்கலாம். சாஃப்ட் என்கொயரி என்பது உங்கள் சொந்த ஸ்கோரை நீங்களே பார்ப்பது. இது ஸ்கோரில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஹார்ட் என்கொயரி என்பது கடன் வழங்குபவர் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைப் பார்ப்பது. அது உங்கள் ஸ்கோரைப் பாதிக்கும்.

·       கிரெடிட் ரிப்போர்ட்டைத் தவறாமல் கண்காணித்தல்: தற்போதைய கிரெடிட் நிலையைப் புரிந்து கொண்டு, தவறான அல்லது முழுமையற்ற தகவலைச் சரிபார்த்து, ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாக சரிசெய்யவும். மேலும், பரிச்சயமில்லாத கிரெடிட் கார்டுகள் அல்லது லோன் கணக்குகள் இருக்கின்றனவா என்று கண்காணிக்கவும். அவை அடையாளத் திருட்டின் அறிகுறிகளாக இருக்கலாம்.

CIBIL ஸ்கோரை எப்படி அறிவது

உங்கள் சொந்த CIBIL ஸ்கோரை அறிவது மிகவும் எளிது என்பதோடு உங்கள் கிரெடிட் ஸ்கோரில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. ஸ்கோரை அறிய:

·       ஆன்லைனில்: அதிகாரப்பூர்வ CIBIL இணையதளமான www.cibil.com தளத்திற்குச் செல்லவும்

·       CIBIL மொபைல் ஆப் மூலம்: ஸ்கோரை எளிதாக அறிய CIBIL மொபைல் செயலியைப் பதிவிறக்கவும்.

·       வங்கி அல்லது UPI செயலி மூலம்: சில வங்கிகள் மற்றும் UPI பிளார்ட்ஃபார்ம்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் கட்டணமின்றி CIBIL ஸ்கோரை அறிய வகைசெய்கின்றன.

தெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமில்லா CIBIL ஸ்கோர் மற்றும் ரிப்போர்ட்டைப் பெறலாம்.

CIBIL ஸ்கோரைப் புரிந்துகொண்டு அதை விழிப்புடன் நிர்வகிப்பதன் மூலம், தனிநபர்கள் நிதிரீதியான நல்வாழ்வை நோக்கி குறிப்பிடத்தக்க வகையில் ஒரு படி முன்னே எடுத்து வைக்கிறார்கள். உயர்ந்த ஸ்கோர் சிறந்த நிதி வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறப்பது மட்டுமல்லாமல், அதைத் தொடர்ந்து கண்காணிப்பது மன அமைதியையும் வழங்குகிறது. நல்ல CIBIL ஸ்கோரை நோக்கிய பயணத்தை இன்றே தொடங்குங்கள்!

Disclosure: 

This post only contains educational information. No financial, tax or legal advice.

This information is for educational purposes only and we do not guarantee the accuracy or completeness of this information. This information does not constitute financial, tax or legal advice and you should consult your own professional adviser regarding your situation. This website may contain links to third party websites. We are not responsible for their content or data collection. Trademarks used in this material are property of their respective owners and no affiliation or endorsement is implied.