Skip to main content

புதிதாகக் கிரெடிட் வாங்குபவரா? ஆரோக்கியமான CIBIL ஸ்கோரை பராமரிப்பது எப்படி?

Blog banners - 21

புதிதாகக் கிரெடிட் வாங்குபவர்களுக்கு, ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோரை உருவாக்குவதும் அதைப் பராமரிப்பதும் கடினமான பணியாகத் தோன்றலாம். இருப்பினும், ஒவ்வொரு பணியையும் சரியான புள்ளியில் தொடங்கும்போது அது எளிதாகிவிடும். பொதுவாக ஆரோக்கியமான CIBIL ஸ்கோர் மற்றும் ரிப்போர்ட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது என்பது புதிதாகக் லோன் வாங்குபவர்கள் அல்லது நியூ-டு-கிரெடிட் (NTC) நுகர்வோர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு அவசியம், ஏனெனில் இது குறைந்த வட்டி விகிதத்தில் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பெறுவதற்கான உங்கள் திறனைப் பாதிக்கும்.

இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமெனில், புதிதாகக் கிரெடிட் வாங்குபவர்கள் என்ற சொல்லானது, இதற்கு முன்பு கிரெடிட் ஹிஸ்டரி இல்லாத,மற்றும் நீண்டகால நுகர்வோர் லோன், தனிநபர் லோன், விவசாயக் லோன், இரு சக்கர வாகனக் லோன், தங்கக் கடன், வீட்டு லோன் அல்லது பிற கிரெடிட் பொருட்கள் போன்ற பாரம்பரியக் கிரெடிட் தயாரிப்புகளை முதன் முதலாக இப்போதுதான் பெற்றுள்ளனர் என்பதைக் குறிப்பதாகும். TransUnion-இன் சமீபத்திய உலகளாவிய ஆய்வு, இந்தியாவில் நிலையான நிதிச் சேர்க்கை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு நியூ-டு-கிரெடிட் நுகர்வோர் முக்கிய பங்களிப்பாளர்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இந்த கட்டுரையில், ஆரோக்கியமான கிரெடிட் ப்ரொஃபைலை வைத்திருப்பதன் முக்கியத்துவம் மற்றும் NTC நுகர்வோர் ஆரோக்கியமான CIBIL ஸ்கோரை எவ்வாறு பராமரிக்கலாம் என்பதைப் பற்றி விவாதிப்போம்.

உங்கள் CIBIL ஸ்கோர் மற்றும் ரிப்போர்ட்டைப் புரிந்துகொள்ளுதல்

உங்கள் கிரெடிட் ப்ரொஃபைலை உருவாக்கும் பயணத்தின் முதல் படி, உங்கள் CIBIL ஸ்கோர் மற்றும் ரிப்போர்ட்டைப் புரிந்துகொள்வதாகும். CIBIL ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரை உள்ள மூன்று இலக்க எண்ணாகும், அதே சமயம் CIBIL ரிப்போர்ட் என்பது ஒரு நபர் வாங்கியுள்ள கிரெடிட் ஹிஸ்டரியின் விரிவான சுருக்கமாகும். CIBIL ஸ்கோர் என்பது ஒரு நபரின் கிரெடிட் தகுதியின் எண் பிரதிநிதித்துவமாகும். ஸ்கோர் மற்றும் ரிப்போர்ட் இரண்டும் இதுவரை நீங்கள் வாங்கிய கிரெடிட்ஹிஸ்டரியின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன, இதில் உங்கள் கிரெடிட் கணக்குகள், செலுத்தப்பட்ட கட்டணங்கள், பயன்படுத்திய கிரெடிட் தொகை மற்றும் வாங்கியது முதல் கிரெடிட் செலுத்தப்பட்டது வரை உள்ள காலம் போன்ற தகவல்கள் அடங்கும். ரிப்போர்ட் ஒரு படி மேலே சென்று உங்கள் கிரெடிட் கணக்குகள், இதுவரை பணம் செலுத்திய விவரங்கள் மற்றும் கிரெடிட் விசாரணைகள் பற்றிய தகவல்களையும் உள்ளடக்குகிறது.

கடன்களை சரியான நேரத்தில் நீங்கள் திருப்பிச் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக கடன் வழங்குபவர்கள் உங்கள் CIBIL ஸ்கோரைப் பயன்படுத்துவார்கள். மேலும் இந்த ரிப்போர்ட் கடன் வழங்குபவருக்கு உங்கள் கிரெடிட் தகுதியைப் பற்றிய உணர்வைக் கொடுக்கும் மற்றும் கடன் வழங்குவதற்கான முடிவுகளை எடுக்க உதவும்.

பிழைகள் அல்லது மோசடிகளால் உங்கள் நிதி ஆரோக்கியத்தில் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களைத் தவிர்க்க உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைத் தவறாமல் கண்காணிப்பது மிகவும் முக்கியம். பிழைகள் அல்லது மோசடி நடவடிக்கைகளைக் கண்டறிவதன் மூலம், உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தவும், கிரெடிட் அல்லது லோன்களைப் பெறுவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கலாம். புதிதாகக் கடன் வாங்குபவர்கள் TransUnion CIBIL இணையதளத்தில் இருந்து தங்களின்  வருடாந்திரக் கிரெடிட் ரிப்போர்ட்டை இலவசமாகப் பெறலாம். 

சரியாகத் தொடங்குதல் - நல்ல கிரெடிட் ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்குதல்

  • நுகர்வோர்  நீடித்துழைக்கும் உபகரணக் லோனுக்கு விண்ணப்பிக்கவும்: கன்ஸ்யூமர் டியூரபிள் லோன் என்பது ஒரு வகையான லோன் ஆகும், இது உபகரணங்கள், எலக்ட்ரானிக்ஸ் அல்லது மரச்சாமான்கள் போன்ற பொருட்களை வாங்க பயன்படுகிறது. இந்தக் கடன்களைப் பொதுவாக மற்ற வகை லோன்களைக் காட்டிலும் எளிதாகப் பெற முடியும். மேலும் புதிதாகக் கிரெடிட் வாங்குபவர்கள் நேர்மறைக் கிரெடிட் ஹிஸ்டரியை நிறுவ இது உதவும்.
  • இப்போது வாங்கி பிறகு பணம் செலுத்து (Buy Now Pay Later-BNPL) விருப்பத்தைப் பயன்படுத்துதல்: BNPL விருப்பத்தேர்வுகள் விரைவான முறையில் பிரபலமடைந்து வருகின்றன, மேலும் இவற்றை குறைந்த டிக்கெட் பொருட்களுக்குப் பயன்படுத்துவதன் மூலம் கிரெடிட் ஆரோக்கியத்தை உருவாக்க இது ஒரு சிறந்த வழியாகும். இருப்பினும், இந்த விருப்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது மற்றும் சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படுவதை உறுதி செய்வது முக்கியம்.
  • நீங்கள் சம்பளக் கணக்கு வைத்திருக்கும் அதே வங்கியிலிருந்து கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க முயற்சி செய்யவும்: சம்பளக் கணக்கை வைத்திருக்கும் வங்கிகள், அவர்களின் நிதி வரலாற்றை அணுகுவதால், இந்தச் செயல்முறை ஒப்புதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். இருப்பினும், மற்ற வங்கிகளை நுகர்வோர் பயன்படுத்தக்கூடாது என்று அர்த்தமில்லை. வெவ்வேறு கடன் வழங்குபவர்களின் கிரெடிட் கார்டு சலுகைகளை ஒப்பிட்டுப் பார்த்து உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
  • பாதுகாப்பான கிரெடிட் கார்டு மூலம் தொடங்கவும்: ஒரு பாதுகாப்பான கிரெடிட் கார்டுக்கு நீங்கள் பிணையமாக பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அது உங்கள் கிரெடிட் வரம்பாக மாறும். பாதுகாப்பான கிரெடிட் கார்டை பொறுப்புடன் பயன்படுத்துவது, நேர்மறையான கிரெடிட் ஹிஸ்டரியை உருவாக்க உதவும்.
  • கிரெடிட்டைப் பொறுப்புடன் அணுகவும்: கிரெடிட்டைப் பொறுப்புடன் அணுகுவதும், உங்களால் கையாளக்கூடியதை விட அதிகமான கிரெடிட்டைப் பெறாமல் இருப்பதும் முக்கியம். தேவையானதை வாங்கக் கிரெடிட்டைப் பயன்படுத்துங்கள் மற்றும் நேர்மறையான கட்டண வரலாற்றை நிறுவுவதற்கு நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான தொகைகளைச் சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் கிரெடிட் பயன்பாட்டை குறைவாக வைத்திருங்கள்: உங்கள் கிரெடிட் பயன்பாடு என்பது உங்கள் கடன் வரம்புடன் ஒப்பிடும்போது நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட்டின் அளவு. அதிகக் கிரெடிட் பயன்பாடு உங்கள் கிரெடிட் ப்ரொஃபைலை எதிர்மறையாக பாதிக்கும். உங்கள் ஸ்கோரில் எந்த எதிர்மறையான தாக்கமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, உங்கள் கிரெடிட் பயன்பாட்டை ஒரு வரம்புக்குள் வைத்திருக்க முயற்சிக்கவும்.

அதை வைத்து - ஒரு நல்ல கிரெடிட் ப்ரொஃபைலைப் பராமரித்தல்

  • சரியான நேரத்தில் பணம் செலுத்தவும்: தாமதமாகப் பணம் செலுத்துவது உங்கள் கிரெடிட் ப்ரொஃபைலைச் சேதப்படுத்தும் மற்றும் எதிர்காலத்தில் கிரெடிட்டுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதைக் கடினமாக்கும். ஒரு பேமெண்ட்டைக் கூட நீங்கள் தவறவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, தானியங்கி பேமெண்ட் செலுத்துதல்கள் அல்லது நினைவூட்டல்களை அமைக்கவும்.
  • உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைக் கண்காணிக்கவும்: அனைத்து தகவல்களும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த, தவறாமல் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைச் சரிபார்த்துக் கண்காணிக்கவும். உங்கள் சொந்த ஸ்கோரைச் சரிபார்ப்பது அதை பாதிக்காது மற்றும் உண்மையில், இது ஒரு நல்ல கிரெடிட் பயிற்சியாகக் கருதப்படுகிறது.
  • அதிகக் கிரெடிட்டிற்காக விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும்: குறுகிய காலத்தில் அதிகமுறை கிரெடிட் பெற விண்ணப்பிப்பது உங்கள் கிரெடிட் ப்ரொஃபைலை எதிர்மறையாகப் பாதிக்கும். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே கிரெடிட் பெற விண்ணப்பித்து, உங்களுக்கான சிறந்த விருப்பங்களைக் கண்டறிய தேடிப்பாருங்கள்.
  • உங்கள் கிரெடிட் கார்டுகளை அதிகப்படுத்துவதை தவிர்க்கவும்: அதிகமான கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது என்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாகப் பாதிக்கும் மற்றும் எதிர்காலத்தில் கிரெடிட்டுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதைக் கடினமாக்கும்.

குறைந்த அளவில் கிரெடிட் பெறுவதைத் தொடங்குவதன் மூலம், கிரெடிட் ஸ்கோர்கள் மற்றும் ரிப்போர்ட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது, பொறுப்பான கடன் வாங்குபவராக இருப்பது மற்றும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், எதிர்காலத்தில் நிதியளவில் வெற்றி அடைவதற்கு ஏற்ப உங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.

Disclosure: 

This post only contains educational information. No financial, tax or legal advice.

This information is for educational purposes only and we do not guarantee the accuracy or completeness of this information. This information does not constitute financial, tax or legal advice and you should consult your own professional adviser regarding your situation. This website may contain links to third party websites. We are not responsible for their content or data collection. Trademarks used in this material are property of their respective owners and no affiliation or endorsement is implied.