Skip to main content

உங்கள் தங்க ஆபரணங்கள் நீங்கள் கடன் அணுகல் பெற எவ்வாறு உதவும் என்பது குறித்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

தன்தேரஸ் திருவிழா ஒரு புதிய முயற்சியைத் தொடங்க அல்லது தங்கம் அல்லது சொத்தில் முதலீடு செய்ய ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதப்படுகிறது. இந்திய நுகர்வோருக்கு தங்கம், செல்வம் மற்றும் செழிப்பை மட்டும் குறிப்பதோடு மட்டுமலாமல், இது ஒரு முதலீடாகவும் கருதப்படுகிறது, ஏனெந்றால், தங்கத்தின் மதிப்பு அரிதாகவே குறைகிறது. நுகர்வோர் தங்கத்தால் நிச்சயமாக நல்ல வருவாய் பெற முடியும், இது பெரும்பாலும் கொள்முதல் மதிப்பை விட அதிகமாக இருக்கும், இதனால் இது விரும்பப்படும் ஒரு முதலீடாகிறது. எனினும், அவசர பணத் தேவை ஏற்பட்டால் தங்கத்தைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று தங்கக் கடனுக்கு விண்ணப்பிப்பதாகும் (இது தங்கக் கடன் என்றும் அழைக்கப்படுகிறது). இது உங்களுக்கு உண்மையில் தேவைப்படும்போது கடன் அணுகல் பெறுவதற்கான விரைவான மற்றும் தொந்தரவு இல்லாத வழியாகும். இன்று, பல வங்கிகளும் NBFC-களும் தங்கக் கடன் வழங்குகின்றன, அவை பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற மற்ற வகை கடன்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

 தங்கக் கடனுக்கு விண்ணப்பிப்பதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: 

  • எளிதான ஆவணமாக்கல்

நீங்கள் விலையுயர்ந்த தங்க ஆபரணங்களை அடகு வைப்பதால், நீங்கள் கடன் வழங்குபவருக்கு வேறு எந்த பாதுகாப்பு/பிணையையும் சமர்ப்பிக்க தேவையில்லை. கடன் வழங்குநர்கள் அடையாளச் சான்று (உங்கள் PAN கார்டு, வாக்காளர் ஐடி அல்லது ஆதார் கார்டு போன்றவை) மற்றும் முகவரிச் சான்று (உங்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது மின்சார பில் போன்றவை) ஆவணங்களின் பட்டியலைக் கேட்கலாம்.

  • விரைவான செயலாக்க நேரம்

லோனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பாகத் தங்கம் கருதப்படுகின்றது மேலும் தவணையைக் கட்டத் தவறினால் கடன் வழங்குபவர் தங்க உடமைகளை விற்கத் தேர்வு செய்யலாம். சில கடன் வழங்குநர்கள் சில மணிநேரங்களில் கடன் வழங்குவதால் செயலாக்க நேரம் குறைகிறது.

  • வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மை

பர்சனல் லோனைப் போலவே, தங்க லோனை எடுக்கும்போது நீங்கள் இறுதிப் பயன்பாட்டை அறிவிக்கத் தேவையில்லை, இதனால் அதை எந்தவொரு அவசர நிதித் தேவைக்கும் பயன்படுத்த முடியும், மேலும் தங்கக் கடன் பயன்படுத்துவதற்கு நெகிழ்வானதாகும்.

  • குறைந்த வட்டி விகிதம்

இது ஒரு பாதுகாப்பான கடன் என்பதால், கடன் வழங்குநர்கள் பர்சனல் லோனுடன் ஒப்பிடும்போது குறைந்த வட்டி விகிதத்தை விதிக்கிறார்கள்.  இது மாறுபட்டாலும், தங்கக் கடனுக்கான வட்டி விகிதம் ஒரு கடன் வழங்குபவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடும் மற்றும் இது கூடுதல் செயலாக்கக் கட்டணங்களுடன் 9.24% முதல் 17% வரை இருக்கும்.

  • சமச்சீர் கடன் கலவை

தங்கக் கடன் என்பது ஒரு பாதுகாப்பான கடன் வகையாகும், இதில் உங்கள் தங்கப் பொருட்களை வங்கி அல்லது கடன் வழங்குபவரிடம் பிணையமாக வைத்துக் கடன் பெறலாம். இதற்கு ஈடாக, நீங்கள் தற்போதைய சந்தை மதிப்பு, தங்கத்தின் தரம் மற்றும் கடன் வழங்குபவரின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் 70 - 80 சதவீதம் வரை பெறலாம். நுகர்வோரின் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற லோன்களின் ஆரோக்கியமான கலவையை கடன் வழங்குபவர்கள் சாதகமாகக் கருதுவதால், பாதுகாப்பான லோன் உங்கள் கடன் மதிப்பெண்ணை மேம்படுத்தவும் உதவுகிறது.

  • குறைவான கடன் காலம்

நீங்கள் உங்கள் கடன் வழங்குநரைப் பொறுத்து 1 மாதத்திலிருந்து 5 ஆண்டுகள் வரை தங்கக் கடன் பெறலாம். இந்த நெகிழ்வுக் காலம் மற்றும் குறுகிய கால லோன் நீங்கள் உங்கள் சௌகரியபடி கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு திட்டமிட உதவுகிறது.

எனினும், ஒருவர் தங்கக் கடன் எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் செலுத்தாத நிலையில், கடன் வழங்கியவர் அதிக வட்டியை விதிக்கலாம் அல்லது, நிலுவைத் தொகையை மீட்பதற்காக உங்கள் தங்கப் பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.  நீங்கள் தங்கக் கடன் பெறுவதாக இருந்தால், நீங்கள் கடன் உணர்வுடனும் கடனைப் பற்றிய அறிதல் உள்ளவராகவும் இருக்க உதவும் இரண்டு குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • கடனைப் பொறுப்புடன் பெறுவதை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் விரும்பும் தொகைக்கு மாறாக உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும் தொகைக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் தங்க ஆபரணங்களை வைத்துப் பெறும் தங்கக் கடன்கள் பாதுகாப்பானவை; எனினும் நீங்கள் எத்தனை ஆபரணங்களை வைத்துக் கடன் வாங்குகிறீர்கள், கடனை திருப்பிச் செலுத்துவதற்கான உங்கள் திறன் என்ன என்பதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.
  • உங்கள் CIBIL மதிப்பெண்ணை மேம்படுத்த அதைப் பயன்படுத்தவும்: உங்கள் கடன் வழங்குபவர் உங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களை (அல்லது திருப்பிச் செலுத்துதல்களில் தாமதம்) CIBIL மற்றும் மற்ற கடன் பணியகங்களுக்கு அறிவிப்பார். மற்ற காரணிகளில், சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது உங்களுக்கு சிறந்த CIBIL மதிப்பெண்ணை உருவாக்க உதவக்கூடும், மற்றும் உங்கள் எதிர்காலக் கடன் அணுகலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால், ஒவ்வொரு முறையும் சரியான நேரத்தில் தவணையைச் செலுத்த வேண்டுமென்பதை நினைவில் கொள்ளவும்.

மற்ற பல கடன் விருப்பத்தேர்வுகள் போலவே, தங்கக் கடன்கள், கடனை விரைவாக அணுக உங்களுக்கு உதவக்கூடும், இதனால் தங்கம் இன்றும் கூட ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாக அமைகிறது. தயவுசெய்து கடன் வழங்குபவர்களின் சிறிய எழுத்துக்களை கவனமாகப் படித்து, தகவலறிந்த கடன் முடிவை எடுக்கவும். உங்கள் கடன் சுயவிவரம் அதைப் பொறுத்தே அமையும்.

Disclosure: 

This post only contains educational information. No financial, tax or legal advice.

This information is for educational purposes only and we do not guarantee the accuracy or completeness of this information. This information does not constitute financial, tax or legal advice and you should consult your own professional adviser regarding your situation. This website may contain links to third party websites. We are not responsible for their content or data collection. Trademarks used in this material are property of their respective owners and no affiliation or endorsement is implied.