பெரும்பாலும் ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திலிருந்து பெறும் கல்வி வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான அடிக்கல்லாகக் கருதப்படுகிறது. எனினும், கல்விக்கான செலவு வேகமாக அதிகரித்து வருகிறது, மேலும் கல்விக் கடனானது நிதி குறைவாக உள்ள பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு சிறந்த விருப்பத்தேர்வாக உள்ளது. உண்மையில், இந்திய ரூபாய்க்கு எதிராக டாலர் மதிப்பு வலுப்பபெற்றிருப்பதால், வெளிநாட்டில் கல்வி பெறுவது என்பது பெருஞ்செலவாகிவிட்டது. இந்தப் போக்கு TransUnion CIBIL-இன் தரவுகளிலும் பிரதிபலிக்கிறது, இதில் புதிதாக திறக்கப்பட்ட கல்விக் கடனின் சராசரி டிக்கெட் அளவில் 48% உயர்வு ஏற்பட்டுள்ளது 2015 இல் 5.73 லட்சம் ரூபாயிலிருந்து 2018 இல் 8.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
உங்கள் குழந்தையின் உயர்கல்விக்கு நிதியளிக்க உதவும் கல்விக் கடனை நீங்கள் கருத்தில் கொண்டிருந்தால், நீங்கள் இதை முடிவு செய்வதற்கு முன், நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
- சலுகைகளை மதிப்பிட்டு ஒப்பிடுங்கள்: நீங்கள் தீர்மானிப்பதற்கு முன் பல கடன் வழங்குநர்களிடம் சரிபார்க்கவும். ஒருங்கிணைப்பு தளங்கள் பல்வேறு வங்கிகளில் உள்ள வட்டி விகிதங்களை ஒப்பிடுவதால் சிறந்த விகிதத்தைத் தேர்வு செய்ய உதவலாம். பிரதான் மந்திரி வித்யா லட்சுமி திட்டத்தின் கீழ், அரசு வித்யா லட்சுமி போர்ட்டல், மூலம் ஒரு ஆதரவு முறையை வழங்குகிறது, இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பல்வேறு கல்விக் கடன் விண்ணப்பங்களைப் பார்க்கவும், விண்ணப்பிக்கவும், மற்றும் கண்காணிக்கவும் உதவுகிறது. இது உங்களுக்கு நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விருப்பத்தேர்வுகளையும் சிறந்த வட்டி விகிதங்களையும் வழங்கும் கடனைத் தேர்வு செய்ய உதவும்.
- நீங்கள் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் கடன் வழங்குநரின் பிணையத் தேவையைப் புரிந்து கொள்ளுங்கள்: லோன் தொகையைப் பொறுத்து கடனளிப்பவர்கள் 100% கடன் வழங்கலாம். ரிசர்வ் வங்கி விதிகளின்படி, 4 லட்சம் ரூபாய் வரையிலான லோன் தொகைக்கு முன் பணம் (சுய நிதி) தேவைப்படும். நீங்கள் உங்கள் குழந்தையின் உயர் படிப்பை இந்தியாவில் திட்டமிடுகிறீர்கள் என்றால், 5% பணம் சுயநிதியாகவும் மற்றும் வெளிநாட்டில் என்றால் முன் பணம் 15% ஆகும். அந்த தொகை 4 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் வங்கிகள் பிணையம் கேட்பதில்லை. இந்த தொகை 4 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை இருந்தால் மட்டுமே உத்தரவாதம் அளிப்பவர் தேவை ஏற்படும், மேலும் 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி தேவைப்பட்டால் வங்கிக்கு பாதுகாப்பாக உறுதியளிக்க சொத்து தேவைப்படும் இது கடன் வாங்கியவர் கடனை திருப்பிச் செலுத்தத் தவறினால் ஈடாகக் கருதப்படும்.
- நல்ல CIBIL மதிப்பெண்ணைப் பராமரிக்கவும்: பொதுவாக, ஒருவரின் குழந்தை கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பெற்றோர் அல்லது பாதுகாவலர் அவர்களின் ‘உத்தரவாதம் அளிப்பவர்’ ஆவார்கள். ஒரு மாணவருக்கு கடன் வரலாறு இல்லையென்றால், கடன் வழங்குபவருக்கு ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் கடனுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில், கடன் விண்ணப்பம் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவாததாரருக்கு நல்ல கடன் மதிப்பெண் இருக்க வேண்டியது அவசியமாகும். விண்ணப்பதாரருக்கு 750+ கடன் மதிப்பெண் இருந்தால் கடன் வழங்குநரிடமிருந்து சிறந்த கட்டணங்களைப் பெறலாம்.
- உங்கள் திருப்பிச் செலுத்தும் யுக்தியைத் திட்டமிடுங்கள்: முதல் மாதத்திலிருந்தே வட்டி விகிதம் திரட்டப்பட்டாலும், சில சந்தர்ப்பங்களில் மாணவர்கள் கடன் தொகையை செலுத்தத் தொடங்குவதற்கு அவர்களுக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படலாம் - இது கடன் தவணை உரிமைக் காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தின் நன்மைகள் என்னவென்றால், உங்கள் குழந்தை இந்த சலுகைக் காலத்திற்குப் பிறகு EMI செலுத்த முடியும் என்றாலும், நீங்கள் EMI-களை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தத் தொடங்கினால் உங்கள் குழந்தை கடனை விரைவாக முடிக்க முடியும்.
- கூடுதல் நன்மைகள்: கல்விக் கடன் எடுப்பதால் வரிச் சலுகை போன்ற சில சலுகைகளை் பெறலாம். வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80E - இன் கீழ், கடன் வாங்குபவர் கடனின் வட்டிப் பகுதி முழுவதுக்கும் விலக்குக் கோரலாம். கல்விக் கடன் எடுத்துக்கொள்வது நேர்மறையான கடன் தடம் உருவாக்குவதற்கு உதவும், இது பெரும்பாலும் மாணவர்கள் எடுக்கும் முதல் கடனாக இருக்கும்.
இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், நீங்கள் கவலையில்லாமல் உங்கள் குழந்தையின் கல்வியை எளிதாக திட்டமிடலாம். கல்விக் கடனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதால் உங்கள் குழந்தைக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் திடமான லோன் சுயவிவரத்தை உருவாக்கும்.