உங்கள் CIBIL அறிக்கை என்பது உங்கள் தனிப்பட்ட தகவல், தொடர்பு விவரங்கள், வேலைவாய்ப்புத் தகவல், லோன் அக்கவுண்ட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்கள் மற்றும் விசாரணைத் தகவல்கள் ஆகியவை அடங்கிய உங்கள் கடன் வரலாற்றின் விரிவான பதிவாகும். மற்றபடி, உங்கள் CIBIL மதிப்பெண் என்பது உங்கள் CIBIL அறிக்கையின் 3 இலக்க எண் சுருக்கமாகும், இது உங்கள் கடன் தகுதியைப் பிரதிபலிக்கும். இது உங்கள் கடன் வரலாறு மற்றும் கட்டண போக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது - இது உங்கள் சுயவிவரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும், குறிப்பாக உங்கள் கடந்தகாலப் போக்கு உங்கள் எதிர்கால செயல்களின் சுட்டிக்காட்டியாக எடுத்துக் கொள்ளப்படும்.
உங்கள் CIBIL அறிக்கையில் உங்கள் கடன் வரலாற்றின் கடைசி 36 மாதங்கள் உட்படும், மற்றும் உங்கள் CIBIL மதிப்பெண் உங்கள் கடன் போக்கின் கடைசி 24 மாதங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கைக்கு இடையில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், உங்கள் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதலில் இரண்டிற்கும் பங்கு உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும், மேலும் கடன் வழங்குநர்கள் உங்கள் கடன் தகுதியை மதிப்பிடுவது என்பது CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை இரண்டையும் சார்ந்திருக்கும்.
தொழில்நுட்ப ரீதியாக, ஒரு நபர் CIBIL மதிப்பெண் பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு மேல் கடன் தகவல்கள் இருக்க வேண்டும். எனினும், ஒரு கட-னுக்கு-புதிய நுகர்வோருக்கு மதிப்பெண் உருவாக்க போதுமான தகவல்கள் அல்லது கடன் வரலாறு இல்லாமல் இருக்கலாம். இந்த வகையில், அவர்கள் ஒரு NH/NA ஐப் பெறலாம் (வரலாறு இல்லை அல்லது கிடைக்கவில்லை). காலப்போக்கில், அவர்கள் கடன் தடம் உருவாக்க, சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, நல்ல கடன் கலவை மற்றும் கடன் பயன்பாட்டு வரம்புகளுக்குள் இருப்பது போன்ற நல்ல கடன் போக்குடன் இருக்க வேண்டும். இறுதியில் இது, 300 மற்றும் 900-ற்கு இடையிலான CIBIL மதிப்பெண் இலக்கை அடைய வழிவகுக்கும். உங்கள் மதிப்பெண் 900-ற்கு நெருக்கமாக இருந்தால், உங்கள் கடன் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். உண்மையில், 79 சதவீத லோன்கள் 750-ற்கும் அதிகமான CIBIL மதிப்பெண் பெற்ற நுகர்வோருக்கு அளிக்கப்படுகின்றது.
நீங்கள் கடன் பெறுவதற்கு புதியவர் என்றால் அல்லது நீங்கள் இன்னும் மதிப்பெண் பெறவில்லை என்றால், அல்லது உங்களிடம் 750-ற்கு மேல் மதிப்பெண் இல்லையென்றாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அதிர்ஷ்டவசமாக, கடன் வழங்குநர்கள் உங்கள் கடன் தடம் குறித்து விரிவாகத் தெரிந்துக்கொள்ள உங்கள் CIBIL அறிக்கையைப் பார்க்கலாம். இதில் உரிய தேதியை கடந்த நிலுவைக் கட்டணங்கள், லோன் அக்கவுண்ட்களில் சிவப்புக் கொடிகள் அல்லது உங்கள் அக்கவுண்ட்டில் செய்யப்பட்ட விசாரணைகளின் எண்ணிக்கை சரிபார்க்கப்படுவது அடங்கும் - இவை அனைத்தும் உங்கள் அறிக்கையில் கிடைக்கும். இந்தக் கண்ணோட்டம் லோன் விண்ணப்பத்திற்கு எழுத்துறுதி மற்றும் ஒப்புதல் அளிக்கும்போது அவர்கள் சிறந்த தகவலறிந்த முடிவை எடுக்க அனுமதிக்கிறது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கடன் வழங்குநர்கள் கடன் உணர்வுள்ள, அதிக மதிப்பெண் பெற்ற நுகர்வோருக்கு முன்னுரிமையளிக்கப்பட்ட லோன்களுக்கு வட்டி விகிதத்தில் தள்ளுபடியளிக்கத் தொடங்கியுள்ளனர். இப்போது, அதிக CIBIL மதிப்பெண் மற்றும் திடமான CIBIL அறிக்கை உங்களுக்கு கடன் அணுகலை வழங்குவது மட்டுமல்லாமல், கணிசமான சேமிப்புக்கும் வழிவகுக்கிறது.
உங்களுக்கு உங்கள் நிதி இலக்குகளை நனவாக்க ஆர்வம் இருந்தால், நீங்கள் 750+ CIBIL மதிப்பெண் மற்றும் திடமான CIBIL அறிக்கையை நோக்கி செயல்பட வேண்டும். உங்கள் மதிப்பெண் மற்றும் அறிக்கையைத் தவறாமல் கண்காணிப்பது உங்கள் தனிப்பட்ட மற்றும் லோன் அக்கவுண்ட் விவரங்கள் சரியாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க உதவுகிறது, மேலும், இதன் மூலம் உங்களுக்குத் தேவைப்படும்போது கடன் அணுகலைப் பெறலாம்.
Disclosure:
This post only contains educational information. No financial, tax or legal advice.
This information is for educational purposes only and we do not guarantee the accuracy or completeness of this information. This information does not constitute financial, tax or legal advice and you should consult your own professional adviser regarding your situation. This website may contain links to third party websites. We are not responsible for their content or data collection. Trademarks used in this material are property of their respective owners and no affiliation or endorsement is implied.