நன்நடத்தையுள்ள மனிதனுக்கு, நல்ல பழக்கங்கள் உடனிருக்கும். நாம் அனைவரும் பழக்கத்தின் படைப்புகள் - நம் அன்றாட நடைமுறைகள் மற்றும் திட்டங்களை வியக்கத்தக்க துல்லியத்துடன் பின்பற்றுகிறோம். நம்மை நாமே சிறந்த மனிதராக வடிவமைக்கும் ஆற்றலை இந்தப் பழக்கவழக்கங்கள் தருகின்றன. நம் வாழ்க்கையினுடைய ஆரம்ப காலகட்டத்தில், நமது சமூக திறன்கள், மற்றவர்களுடன் இருக்கும் உறவுகள் அல்லது நிதிப் பழக்கவழக்கங்கள் போன்ற நம் வாழ்வினுடைய வெவ்வேறு அம்சங்களை வடிவமைக்கும் நல்ல பழக்கங்களை நமது பெற்றோர் நமக்கு வலியுறுத்தினர்.
இன்றைய கடன் தளத்தில் நல்ல நிதிப் பழக்கவழக்கங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கார்டு அல்லது கடனைப் பெறுவதன் மூலம் உங்கள் கடன் பயணத்தைத் தொடங்கியவுடன், ஒரு கடன் தடம் உருவாக்கப்படுகிறது. உங்களுடைய கடன் சுயவிவரம் மற்றும் CIBIL மதிப்பெண்ணை உருவாக்க இந்த தடம் கருவியாக இருக்கும். இப்போது, உங்கள் CIBIL மதிப்பெண் என்பது 300 முதல் 900 வரையிலான உங்கள் கடன் அறிக்கையின் 3 இலக்க எண்ணின் சுருக்கமாகும். சுருக்கமாக, இது காலப்போக்கில் உங்கள் கடன் போக்கு (மற்றும் பழக்கவழக்கங்களின்) பிரதிபலிப்பாகும். மோசமான கடன் பழக்கம் சாதகமற்ற கடன் சுயவிவரம் மற்றும் குறைந்த CIBIL மதிப்பெண்களுக்கு வழிவகுக்கும் பொழுது, நல்ல கடன் பழக்கம் நேர்மறையான கடன் சுயவிவரம் மற்றும் அதிக CIBIL மதிப்பெண்ணிற்கு வழிவகுக்கிறது. இதுதான் எதிர்காலத்தில் நீங்கள் கடன் பெறுவதைத் தீர்மானிக்கிறது.
உங்கள் லோன் அல்லது கிரெடிட் கார்டு விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்கு முன் கடன் வழங்குநர்கள் உங்கள் கடன் சுயவிவரம், போக்கு முறைகள் மற்றும் திருப்பிச் செலுத்தும் பழக்கங்களைப் புரிந்துகொள்ள உங்கள் CIBIL மதிப்பெண்ணைச் சரிபார்ப்பார்கள். இதனால்தான் நீங்கள் நல்ல கடன் பழக்கத்தை வெளிப்படுத்துவதும் மேம்படுத்துவதும் முக்கியமாகிறது. எங்கு தொடங்குவது என்பது பற்றி உறுதியில்லாமல் உள்ளீர்களா?
நீங்கள் நேர்மறையான கடன் சுயவிவரத்தை உருவாக்கி மற்றும் பராமரிக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய கடன் பழக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
- உங்கள் நிதி குறிக்கோள்கள் மற்றும் முன்னுரிமைகளைத் திட்டமிடுங்கள் - எங்கள் குடும்பதிற்கு மற்றும் அன்பானவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவதற்காக நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இது நாங்கள் அக்கறை காட்டும் முறை ஆகும். இருப்பினும், நீங்கள் உங்கள் நிதி குறிக்கோள்கள்களை எச்சரிக்கையுடன் திட்டமிட வேண்டும் மற்றும் உங்கள் கடன் விருப்பங்களையும் கவனமாக எடைபோட வேண்டும். உங்கள் வருமானத்தை EMI விகிதத்துடன் பரிசீலிக்கவும் (உங்கள் மாத வருமானத்தில் EMI மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களுக்கு எவ்வளவு செல்கிறது என்பதற்கான எளிய கணக்கீடு), இதை 30% க்கும் கீழ் இருக்குமாறு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு கடன் அணுகல் சுலபமாக இருந்தாலும், உங்களுக்கு புதிய கடன் உண்மையிலேயே தேவைப்படும்போது மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் நிதி இலக்குகளை அடைவதற்கும் மற்றும் நேர்மறையான கடன் சுயவிவரத்தை பராமரிப்பதற்கும் இந்த வகையான திட்டமிடல் மிக முக்கியமானதாகும்.
- பட்ஜெட் மற்றும் சேமிப்பு - நாம் குழந்தைகளாக இருந்த பொழுது, நம் பெற்றோர் நமக்கு விரிவாக சேமிப்பதைப் பற்றி அறிவுறுத்தி உள்ளனர். அந்த அறிவுரை இன்றும் உண்மையாக உள்ளது. உங்கள் மாதாந்திர செலவுகள், வரவிருக்கும் செலவுகள், கடன் பொறுப்புகள் மற்றும் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றை பட்ஜெட் செய்து, அவசரகாலத்திற்கு சேமியுங்கள். நம் விரல் நுனியில் கடன் பெறக்கூடிய ஒரு காலத்தில் நாம் வாழும்போது, நிதி நெருக்கடியில் சிக்கவைக்கும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். சராசரியாக, சுமார் மூன்று மாத சம்பளம் அவசர நிதியாக ஒதுக்கி வைக்கப்பட வேண்டும், இதன் மூலம் நீங்கள் சிரமத்தை சற்று எளிதாகக் கடக்க முடியும். மெதுவாக சேமிக்கத் தொடங்குங்கள், ஆனால் நிச்சயமாக செய்யுங்கள். அவசர நிதிக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஒதுக்குங்கள்.
- உங்கள் செலவுகளைக் கண்காணியுங்கள் - நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்றும், மற்றும் வாராந்திர அல்லது மாதாந்திர அடிப்படையில் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்று கவனிப்பது (உங்கள் வருமானத்திற்கு செலவு விகிதம் என்றும் அழைக்கப்படுகிறது) உங்கள் செலவினங்களைக் கண்காணிக்கவும், தவிர்க்கக்கூடியது என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும், உங்கள் செலவுகளை சிறப்பாக நிர்வகிக்கவும் உதவுகிறது. உங்கள் EMI மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவது நிச்சயமாகத் தவிர்க்க முடியாத செலவுகள் ஆகும், ஆனால் ஆர்டர் செய்வது என்பது தவிர்க்கக் கூடியது ஆகும். நீங்கள் ஒரு டைரியைப் பயன்படுத்துவது, நுணுக்கமான எக்செல் கோப்புகள் மற்றும் நிரல்களைப் பராமரிப்பது ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம் அல்லது உங்கள் செலவுகளை சிறப்பாகக் கண்காணிக்க உதவும் தனிப்பட்ட நிதிக் கருவியைத் தேர்வு செய்யலாம்.
- கடனுக்கான உங்கள் அணுகலைக் கவனமாகப் பயன்படுத்துங்கள் - உங்கள் வாழ்க்கை இலக்குகளை அடைய அல்லது அவசரகாலத்தில் உங்களுக்கு ஆதரவளிக்க கடன் உதவும் என்றாலும், இது உங்கள் கடன்-தகுதியை சரிபார்த்துக் கொள்வதற்காக இருந்தாலும், கிரெடிட் கார்டுகள் அல்லது கடன்களுக்கு நீங்கள் எத்தனை முறை விண்ணப்பிக்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். உங்களிடம் நீட்டிக்கப்பட்ட கடன் வரம்பைக் கொண்ட கிரெடிட் கார்டு இருந்தாலும், குறைந்த கடன் பயன்பாட்டு விகிதத்தைப் பராமரிப்பது மற்றும் உங்கள் கார்டு வரம்பிற்குள் செலவிடுவது ஒரு நல்ல கடன் பழக்கம் ஆகும். உங்கள் தேவைகளை நீட்டிப்பது உங்கள் கடன் சுமையை அதிகரிக்கும், பின்னர் இது நீங்கள் திருப்பிச் செலுத்தும் திறனை பாதிக்கலாம்.
- கடன்-உணர்வுடன் கவனமாக இருங்கள் - உங்கள் வங்கி அறிக்கைகள் மற்றும் முதலீடுகளை அடிக்கடி சரிபார்த்து உங்கள் நிதி மீது கவனம் வைத்திருக்கிறீர்களா? இதேபோல், பொறுப்பான கடன் நுகர்வோர்கள் தங்கள் CIBIL மதிப்பெண்கள் மற்றும் அறிக்கைகளைத் தவறாமல் கண்காணிப்பதன் மூலம் தங்கள் கடன் சுயவிவரத்துடன் இணைந்திருக்கிறார்கள். இது அவர்களின் கடன் சுயவிவரங்கள், கார்டு செலவுகள், கடன் தொகைகள் மற்றும் கடன் போக்கு ஆகியவற்றில் முதலாவதாக இருக்க உதவுகிறது, அதே நேரத்தில் கடன் வழங்குநர்கள் மற்றும் வங்கிகள் CIBIL -உடன் பகிர்ந்த அவர்களுடைய கடன் தகவல்களை இது கண்காணிக்கின்றது. இது அவர்களின் கடன் தகுதியை நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது, இதனால் மிகவும் தேவைப்படும்போது அவர்கள் கடன் அணுகலைப் பெற முடியும்.
இவை அனைத்தையும் நீங்கள் உடனடியாக உருவாக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மெதுவாக, ஆனால் நிச்சயமாக நல்ல கடன் பழக்கவழக்கங்கள் மற்றும் நேர்மறையான கடன் சுயவிவரத்தை நோக்கிச் செயல்படுங்கள், இது உங்கள் வாழ்க்கையின் மற்ற அம்சங்களிலும் எவ்வாறு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் கவனிக்கலாம்.
>> உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை அறிந்து கொண்டு மற்றும் கடன்-உணர்வுடன் கவனமாக இருங்கள். இப்போது சரிபார்க்கவும்.
>> குறைந்த மதிப்பெண் உள்ளதா? அமைதியாக இருங்கள், மற்றும் அதிக மதிப்பெண்ணை நோக்கிச் செல்லுங்கள். எவ்வாறு என்பதை இங்கு பார்ப்போம்.