Skip to main content

CIBIL தரம் மற்றும்

நிறுவனக் கடன் அறிக்கை

CIBIL தரவரிசை என்றால் என்ன?
CIBIL தரம் என்பது உங்கள் நிறுவனக் கடன் அறிக்கையிலிருந்து (CCR) எடுக்கப்படுகிறது. அது உங்கள் CCR-ஐ ஒரு எண் வடிவில் சுருக்கும். அது 10-இலிருந்து 1 அளவுகோல் வரை அளிக்கப்படும், இதில் 1 என்பது தான் பெறக்கூடிய சிறந்தத் தரமாகும். இந்தத் தரம் தற்போது ரூ. 50 கோடி வரை கடன் வெளிப்பாடு உள்ள நிறுவங்களுக்குக் கிடைக்கும்.

 

CIBIL தரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
CIBIL தரத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் முக்கியமான அளவுறுக்கள் முந்தைய மறு-செலுத்தல் போக்கு மற்றும் கடன் பயன்பாடு ஆகும்.

 

CIBIL நிறுவனக் கடன் அறிக்கை (CCR) என்றால் என்ன?
CIBIL நிறுவனக் கடன் அறிக்கை என்பது பல்வேறு கடன் நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட உங்கள் கடன் செலுத்தல் வரலாற்று தகவல் தொகுப்பின் உண்மையான பதிவாகும். கடன் வழங்குநர்கள் தகவலறிந்த கடன் முடிவுகளை - விரைவாக மற்றும் பாரபட்சமின்றி எடுப்பதற்கு உதவுவது CCR-இன் நோக்கமாகும்.

 

CIBIL தரம் மற்றும் CCR-ஐ யாரெல்லாம் அணுக முடியும்?
CIBIL உறுப்பினர்களில் உட்படும் முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை, பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் CIBIL-இடமிருந்து தகவல்களை அணுக முடியும், அதாவது CIBIL-ற்கு தங்கள் எல்லா தரவையும் வழங்கிய உறுப்பினர்கள் மட்டுமே CIBIL கடன் அறிக்கைகளை அணுக அனுமதிக்கப்படுவார்கள். உறுப்பினர்கள் சரியான கடன் முடிவுகளை எடுப்பதற்கு மட்டுமே இதைச் செய்ய முடியும். வேறு நபர் அல்லது நிறுவனத்திற்கு வெளிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது. CIBIL உறுப்பினர்களுக்கு CCR-ஐ மட்டுமே அணுகுவதற்கான விருப்பத்தேர்வும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். நிறுவனங்கள் தங்கள் CIBIL தரவரிசை மற்றும் நிறுவனக் கடன் அறிக்கைகளுக்கு அணுகலை CIBIL-இலிருந்து நேரடியாக கோரலாம். இப்போது உங்களுடையதைப் பெறுங்கள்

 

ஏன் CIBIL தரம் என் CCR-ருக்குக் கிடைக்கவில்லை?
CIBIL தரம் தற்போது ரூ. 50 கோடி வரை கடன் வெளிப்பாடு உள்ள நிறுவங்களுக்குக் கிடைக்கும். CIBIL தரம் கிடைக்காதது எதிர்மறையான விஷயம் அல்ல எனபதில் தயவுசெய்து உறுதியாக இருங்கள். நீங்கள் உங்கள் CIBIL நிறுவனக் கடன் அறிக்கையின் (CCR) அடிப்படையில் உங்கள் நிறுவனத்தின் கடன் செயல்பாட்டை மதிப்பீடு செய்யலாம்.

 

CIBIL தரம் மற்றும் CIBIL மதிப்பெண்ணிற்கு இடையிலான வித்தியாசம் என்ன?

FAQ PAGE

CIBIL தரம் மற்றும் CIBIL மதிப்பீட்டிற்கு இடையிலான வித்தியாசம் என்ன?
கடன் மதிப்பீடுகள் வரலாற்றியலாக வணிகங்களால் அவற்றின் மதிப்புமிக்க பிணையமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாகக் கடன் மதிப்பீடுகள் மதிப்பீடு செய்யப்படுபவரால் கோரப்பட்டு பிறகு நிறுவனம் அளிக்கும் ஆவணங்களை மதிப்பீடு செய்து மற்றும் நிறுவன நிர்வாகிகளால் நேர்காணல் செய்யப்பட்ட பின் கடன் மதிப்பீடு நிறுவனத்தால் வழங்கப்படும். உங்கள் CIBIL தரவரிசைக்கும் உங்கள் கடன் மதிப்பீட்டிற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்னவென்றால், மதிப்பீடு செய்யப்படுபவர் மதிப்பீட்டாளக்கு அளிக்கும் தகவலுடன் ஒப்பிடும்போது தரவரிசை என்பது கடன் வழங்குநர்களிடமிருந்து (CCR) நேரடியாகப் பெறப்படும் பாரபட்சமற்றத் தகவல்களிலிருந்து பெறப்படுகிறது.

 

நான் CCR-இல் உள்ள தகவலை எப்படித் திருத்துவது?
ஒரு சர்ச்சைக் கோரிக்கையைத் தொடங்க எளிதான வழி, முறையாக முடிக்கப்பட்ட ஆன்லைன் சர்ச்சைப் படிவத்தை சமர்ப்ப்பிப்பதாகும். ஓரு ஆன்லைன் சர்ச்சைக் கோரிக்கையை தொடங்க தயவுசெய்து இங்கு கிளிக் செய்யவும்