உங்கள் லோன் விண்ணப்ப செயல்பாட்டில் உங்கள் கடன் தகவல் அறிக்கை (CIR) பெரும் பங்கு வகிக்கிறது, எனவே குறைந்த மதிப்பெண் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும். உங்களுக்கு மோசமான கடன் வரலாறு இருந்து மற்றும் நீங்கள் உங்கள் CIBIL மதிப்பெண் மேம்பட வேண்டும் என்று விரும்பினால், உங்களுக்கு இருக்கும் விருப்பத்தேர்வுகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். ஒரு "கடன் திருத்தும்" நிறுவனத்திற்குச் சென்று பெரிய தொகையைச் செலுத்துவது சிறந்த தீர்வாக இருக்காது. CIBIL எந்த கடன் திருத்தும் நிறுவனத்துடனும் இணையவில்லை.
வழக்கமாக, CIR உடன் இருக்கும் 2 பெரிய சிக்கல்கள்:
ஒரு நடவடிக்கையை பரிந்துரைக்க தொடங்குவதற்கு முன், உங்கள் கடன் அறிக்கையை விவரமாக புரிந்து கொள்வது முக்கியமாகும்.
கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:
1. மதிப்பெண்ணை வாங்கவும்
உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் கடன் அறிக்கையை வாங்கவும். இதன் விலை ரூ. 550/- மட்டுமேமற்றும் நீங்கள் கடன் அறிக்கையை 3 வர்த்தக தினத்தில் அணுகலாம்..
2. கடன் அறிக்கையைச் சரிபார்க்கவும்
உங்கள் அறிக்கையைப் புரிந்து கொண்டு மற்றும் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காண கீழே உள்ள செயல்முறையைப் படிப்படியாகப் பின்பற்றவும்:
• உங்கள் அறிக்கையில் எத்தனை திறந்த அக்கவுண்ட்கள் உள்ளன என்று சரிபார்க்கவும். நீங்கள் சந்திக்கக்கூடிய 2 சிக்கல்கள்:
CIBIL-இன் சர்ச்சைத் தீர்வு செயல்முறையைப் பின்பற்றுவதால் இது எளிதாக சரி செய்யப்படும். தவறாக அறிவிக்கப்பட்டத் திறந்த அக்கவுண்ட்கள் உங்கள் கடன் வெளிப்பாட்டை மிகைப்படுத்தும்.
ஒரு "தள்ளுபடி செய்யப்பட்ட" அல்லது "தீர்க்கப்பட்ட" அக்கவுண்ட் கடன் வழங்குநரால் எதிர்மறையாகப் பார்க்கப்படலாம். ஏதாவது அக்கவுண்ட் தவறாக குறியிடப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும். ஆம் என்றால், CIBIL-இன் சர்ச்சைத் தீர்வு செயலாக்கம் மூலம் ஒரு சர்ச்சையை எழுப்பவும்.
உரிய தேதி தவறிய பகுதியை கவனமாக பார்க்கவும். நீங்கள் "000" அல்லது "XXX" தவிர வேறு எதையாவது கவனித்தால், அது எதிர்மறையாகப் பார்க்கப்படும். நீங்கள் சில செலுத்தல்களைத் தவறவிட்டிருந்தால், உங்கள் பில்கள்/EMI-களை அக்கறையுடன் செலுத்துவதை உறுதி செய்யவும். உங்கள் CIBIL மதிப்பெண் மேம்படும். நீங்கள் உங்கள் மதிப்பெண்ணில் சாதகமான தாக்கத்தைக் காண்பதற்கு குறைந்தபட்சம் 6-8 மாதங்களாவது காத்திருக்க வேண்டும் (அனைத்தும் எதிர்மறையான மாற்றமின்றி தொடர்ந்தால்)
3. நடவடிக்கை தொடங்கவும்
நாம் ஒவ்வொரு உதாரணத்தையும் எடுத்து, மேற்கூறிய சூழ்நிலைகளில் எடுக்கப்பட வேண்டிய தீர்வு நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதற்கு, சிறந்த மாற்றுத் தீர்வு என்ன என்பதைப் பார்ப்போம்:
நீங்கள் தவறான தகவல்களை அடையாளம் கண்டவுடன், சர்ச்சைத் தீர்வு செயலாக்கத்தை தொடங்க இங்கு கிளிக் செய்யவும். CIBIL 30 நாட்களில் உங்களுக்குத் தெரியப்படுத்தும். சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் CIR-இல் பிரதிபலிக்கும் தகவல்கள் சரியானவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினால், எங்களால் எந்த மாற்றமும் செய்ய முடியாமல் போகலாம். சம்பந்தப்பட்ட வங்கியை நேரடியாகத் தொடர்புக் கொள்வதால் செயலாக்கத்தைத் துரிதப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
நீங்கள் முன்பு வேலை இழப்பு அல்லது மற்ற எதிர்பாராத சூழ்நிலைகளால் செலுத்தல்களைத் தவற விட்டிருந்தால், உங்கள் நிதி நிலைமை மாறியவுடன் அந்தத் தொகையை வங்கியில் செலுத்துவது நன்மையளிக்கும். ஒரு நல்ல கடன் வரலாறு, நீங்கள் எதிர்காலத்தில் சிறந்த கடன் சலுகைகள் அனுபவிக்க உதவும்.
உங்களுக்கு இடமாற்றம் ஏற்படும்போது, வங்கிக் கணக்குகளை மாற்றுவது அல்லது தேவையான இடங்களில் கணக்குகளை மூடுவது மட்டுமல்லாமல், திறந்த கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளையும் நிர்வகிப்பது புத்திசாலித்தனமாகும். ஒரு சேமிப்பு அக்கவுண்டுடன் EMI செலுத்தல் இணைக்கப்பட்டிருந்தால், அந்த அக்கவுண்ட் மூடப்படவில்லை என்றும் (மற்றும் போதுமான நிதியளிப்பு செய்வது) அல்லது EMI பற்றுக்கான நிலையான அறிவுறுத்தல் செயலில் உள்ள மற்றொரு அக்கவுண்ட்டிற்கு மாற்றப்படுவதை உறுதி செய்யவும். இதற்கிடையில், நாம் பல முறை இடமாற்றம் குறித்து கிரெடிட் கார்டு வழங்குநருக்கு முன்கூட்டியே தெரிவிப்பதை தவற விடுகிறோம், இதன் விளைவாக தவறவிட்ட கட்டணங்கள், தாமதக் கட்டணம் மற்றும் மற்ற சேவைக் கட்டணங்கள் ஏற்படுகின்றன, பின்னர் அவை பெரிய அளவில் பெருகி விடுகின்றன. இது போன்ற சூழ்நிலையில், நீங்கள் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்துவது தான் சிறந்த தீர்வாகும், ஏனென்றால், உங்கள் நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்படுவதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பாகும்.
அறிக்கையைப் பெறாவிட்டாலும் கார்டு உரிமையாளர் நிலுவைத் தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும் என்று பெரும்பாலான கிரெடிட் கார்டு வழங்குநர்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தெளிவாகக் கூறுகின்றன. அறிக்கைப் பெறாததால் பணம் செலுத்தப்படவில்லை என்பது தவறிய செலுத்தலுக்கான சரியான காரணமாகக் கருதப்படாது (இது கார்டு உரிமையாளர் ஒப்பந்தத்தில் உட்பட்டிருந்தால்). நீங்கள் இதன் காரணமாக கட்டணம் செலுத்தவில்லை என்றால், பிறகு தாமதக் கட்டணம், சேவைக் கட்டணங்கள் போன்றவை சேர்ந்துவிடும். எவ்வளவு விரைவில் இந்த சிக்கல் தீருகிறதோ, அது உங்கள் கடன் வரலாற்றுக்கு அவ்வளவு நல்லது. வங்கியைத் தொடர்புக் கொண்டு உகந்தத் தீர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
ஒருவர் கிரெடிட் கார்டு அல்லது லோன் எடுப்பதற்கு முன், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாகப் படிக்க வேண்டும். ஒருவர் எப்போதும் பராமரிப்புக் கட்டண விதிப்பு, கட்டணம், வழங்கல் கட்டணம், செயலாக்க கட்டணம், அபராதம், வட்டி விகிதங்கள், பரிமாற்றக் கட்டணங்கள், முன் கூட்டியே மூடும் கட்டணங்கள் போன்ற கட்டணங்கள் பற்றி (ஒரு முறை மற்றும் தொடர்) விசாரிக்க வேண்டும்.
ஒருவேளை மோசடி பரிவர்த்தனை ஏற்பட்டால், வங்கி அதை விசாரணை செய்து அதன் கண்டுப்பிடிப்பை பொறுத்து உங்களுக்கு கட்டணம் திரும்பி அளிக்கப்படலாம் அல்லது அளிக்கப்படாமல் இருக்கலாம். இந்த சர்ச்சைகள் உங்களுக்கும், வங்கிக்கும் இடையில் தீர்க்கப்பட வேண்டும், அதனால், கடன் வரலாறு பாதிக்கப்படாமல்/குறைந்த அளவு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
ஓரு கடன் திருத்தும் சேவை உங்கள் CIBIL கடன் தகவலில் நேரடியாகத் தகவலை அகற்ற அல்லது திருத்த முடியாது.
நீங்கள் ஒரு கடன் திருத்தும் நிறுவனத்தை உங்கள் சார்பில் கடன் தகவல் அறிக்கைக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் செய்தால், நாங்கள் (ரகசியத்தன்மையை உறுதி செய்ய) அளிக்கப்பட்ட ஈமெயில் முகவரி அல்லது வீட்டு முகவரிக்கு அறிக்கையை அனுப்புவோம். உங்கள் கடன் தகவல் இரகசியமானத் தகவல் அது சாதாரணமாகப் பகிரப்படக் கூடாது.
நீங்கள் CIBIL-இன் இலவச ஆன்லைன் சர்ச்சைத் தீர்வு செயலாக்கத்தைத் தேர்வு செய்யலாம்.
உங்கள் கடன் அறிக்கையில் நாங்கள் நேரடியாக மாற்றங்கள் செய்ய முடியாது. நாங்கள் மாற்றம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட வங்கி அல்லது கடன் நிறுவனம் எங்களை அங்கீகரிக்க வேண்டும்.